அனைவருக்கும் தெரியும். ஆனால் இவர்களின் சொந்த பூர்விக கிராமம் இராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகில் இருக்கும் கொத்தங்குளம் அருகில் இருக்கும் தத்தங்குடி என்ற சிறிய ஊர். க்சிறிய கிராமம்தான் இது,கொத்தங்குளத்தில்தான்மணவாள மாமுனிகள் வந்து சென்றதற்கு அடையாளமாக ஒரு பெருமாள் கோவில் உள்ளது. வைணவர்கள் அந்தக்காலத்தில் அதிகமாக இங்கு இருந்திருக்கின்றனர்
கொத்தங்குளம் அருகில் 1கிமீ தூரத்தில் இருக்கும் தத்தங்குடி என்ற கிராமத்தில்தான் கமல்ஹாசன் குழந்தையாக அதாவது 6மாத குழந்தையாக இருந்தது வரை இருந்தார் என அவ்வூர் மக்கள் சொல்கிறார்கள்.
பிறகு கமல்ஹாசன் பரமக்குடி சென்று விட்டதாகவும் சொல்கிறார்கள். இவ்வூரில் நிறைய வெள்ளந்தியான மக்கள் வசித்து வருகிறார்கள் இவ்வூரில் கமல்ஹாசன் முன்னோர்கள் வழிபட்ட பரதேவதை கோவில் உள்ளது இது இவர்களின் குலதெய்வம் போல உள்ள அம்மன். இந்த ஊருக்கு கமலின் உறவினர்கள் பலர் இன்னும் வந்து செல்வதாக ஊர் மக்கள் சொல்கிறார்கள். காலப்போக்கில் கமல் குடும்பம். உட்பட கமல் உறவினர்கள் உட்பட பலரும் வேறு வேறு பெரிய ஊர்களில் செட்டில் ஆகி விட்டார்கள் வெள்ளந்தியான அந்த மக்கள் அளித்த பேட்டி இதோ.