சினிமாவைப் பொறுத்த வரைக்கும் ஒரு கேரக்டர் இந்த நடிகருக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். இந்த நடிகருக்கு பொருத்தமாக இருக்காது என்பதை முன்கூட்டியே நன்கு அறிந்தவர்களாக இயக்குனர்கள் ஆழமாக சிந்தித்து விடுகிறார்கள்.
ஆனால் எப்போதுமே இந்த மாதிரி ஒரு சூழல் நிகழ்ந்து விடாது. அந்தந்த நடிகர்களின் சூழ்நிலைக்கேற்ப சில சமயம் அவர்களால் நடிக்காமல் போகலாம். அல்லது கதை பிடிக்காமல் போகலாம். இப்படி பல காரணங்களால் ஒரு நடிகருக்கு பதிலாக வேறொரு நடிகர் நடித்து பெரும்பாலான படங்கள் வெற்றி அடைந்ததும் உண்டு. தோல்வி அடைந்ததும் உண்டு.
அந்த வகையில் ரஜினி நடித்து மிகவும் புகழ்பெற்ற ஒரு திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது கமல் என்ற ஒரு செய்தி இப்போது சோஷியல் மீடியாவில் வலம் வந்து கொண்டிருக்கின்றது. ரஜினி, சிவகுமார் நடிப்பில் வெளியான திரைப்படம் புவனா ஒரு கேள்விக்குறி.
ஆனால் இந்த படத்தில் முதலில் ரஜினி நடித்த கேரக்டரில் சிவகுமாரும் சிவக்குமார் நடித்த கேரக்டரில் ரஜினியும் தான் நடிக்க இருந்தது. ஆனால் அதன் பிறகு அதன் போக்கு மாறி அந்தந்த கேரக்டரில் அவர்களே நடித்திருந்தனர்.
இதை எல்லாம் தாண்டி இப்போது ரஜினி நடித்த கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது கமல் தான் என சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதுவும் இந்த கதையை பஞ்சு அருணாச்சலம் படிப்பதற்கு முன்னாடி எஸ்.பி. முத்துராமன் படிப்பதற்கு முன்னாடியே இந்த கதையைப் பற்றி நன்கு அறிந்தவர் ஆர் சி சக்தி.
ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக ஒரு படத்தை இயக்க வேண்டும் என ஆர் சி சக்தி நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் புவனா ஒரு கேள்விக்குறி கதையை அவர் படித்திருக்கிறார். அந்த கதை மிகவும் பிடித்துப் போக அதில் கமலை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என நினைத்து கமலிடம் இந்த கதையை போய் சொல்லி இருக்கிறார்.
கதையைக் கேட்ட கமலுக்கு ஏதோ ஒரு காரணத்தால் அவருக்கு இந்த கேரக்டரில் நடிக்க விருப்பமே இல்லையாம். அதன் பிறகு தான் அவர் நடிக்க இருந்த கேரக்டரில் ரஜினி வந்து நடித்திருக்கிறார். ஆனால் பின்னாளில் இந்த படம் ரஜினிக்கு எப்படி ஒரு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது என அனைவருக்குமே தெரிந்திருக்கும்.