தமிழ் சினிமாவின் மூத்த மற்றும் முன்னணி நடிகராக இருந்து வருபவர் கமல்ஹாசன். தனது ஐந்து வயது முதலே நடிப்பை தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கியவர் கமலஹாசன். 1960 ஆம் ஆண்டு களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் கமலஹாசன். அன்றிலிருந்து இன்று வரை கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார் கமல்ஹாசன்.
இவரை உலகநாயகன் என்று அழைக்கின்றனர். அது மட்டும் இல்லாமல் இன்றைய இளம் தலைமுறை நடிகர்கள் அவரை ஒரு ஆசானாகவே பார்க்கின்றனர். இவர் நடித்த ஹிட் படங்கள் ஏராளம்.1980 90களில் புகழின் உச்சியில் இருந்தார் கமல்ஹாசன். அதற்கு அடுத்ததாக இன்றும் மனம் தளராமல் நாயகனாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் கமல்ஹாசன். இவர் நடித்த தக்லைப் திரைப்படம் வெளிவர இருக்கிறது.
கமல்ஹாசன் அவர்கள் நடிப்பது மட்டுமல்லாமல் பல திரைப்படங்களை தயாரித்தும் இருக்கிறார் கமல்ஹாசன். மேலும் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியையும் நடத்தி வருகிறார் கமல்ஹாசன். தனது கட்சியின் சார்பாக மாநிலங்களவை எம் பி ஆக வருகிற 25 ஆம் தேதி பதவி ஏற்க உள்ளார்.
இந்நிலையில் நாளை மாநிலங்களவை எம்பியாக பதவி ஏற்க இன்று டெல்லி சென்று இருக்கிறார் கமல்ஹாசன். இதற்காக அவர் நிறைய ஹோம் ஒர்க் செய்துள்ளாராம். முக்கியமாக சினிமா துறையில் அரசு என்னென்ன மேம்பாடுகளை செய்ய வேண்டும் என்பதை பற்றி நிறைய எழுதி வைத்திருக்கிறாராம். ஆனால் ராஜீவ் காந்தி அவர்களுக்கே அங்கு பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில் இருக்கும்போது இவருக்கு எந்த அளவுக்கு பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்று பலர் விமர்சனம் செய்து வருகிறார்கள். இருந்தாலும் தன்னால் முயன்ற வரை எல்லா விஷயங்களையும் அவையில் பேசிவிட வேண்டும் என்று கமல்ஹாசன் தயாராக இருக்கிறாராம்.
