எனக்கு இந்த பட்டம் வேண்டாம்… கமல்ஹாசனின் திடீர் அறிவிப்பால் பரபரப்பான திரையுலகம்…

கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் பணியாற்றும் மூத்த மற்றும் முன்னணி நடிகர் ஆவார். இவர் தனது ஐந்து வயதில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். கமல்ஹாசன் கிட்டத்தட்ட 65 ஆண்டுகளுக்கும் மேலாக இன்றளவும்…

kamalhaasan

கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் பணியாற்றும் மூத்த மற்றும் முன்னணி நடிகர் ஆவார். இவர் தனது ஐந்து வயதில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். கமல்ஹாசன் கிட்டத்தட்ட 65 ஆண்டுகளுக்கும் மேலாக இன்றளவும் ஓயாது பணியாற்றும் முன்னணி நடிகராக இருந்து வருகிறார்.

நடிப்பது மட்டுமில்லாமல் சில திரைப்படங்களை இயக்கியும் தயாரித்தும் இருக்கிறார் கமல்ஹாசன். 1960 ஆம் ஆண்டு களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தனது சினிமா கேரியரை ஆரம்பித்தார் கமல்ஹாசன். அதற்கு பிறகு இவர் நடித்த வெற்றி படங்கள் எண்ணில் அடங்காதவை. 1973 ஆம் ஆண்டு அரங்கேற்றம் என்ற திரைப்படத்தில் தான் நாயகனாக நடித்தார் கமல்ஹாசன்.

சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்து அரசியல் கட்சி ஒன்றையும் நடத்தி வருகிறார் கமல்ஹாசன். இவர் தனது அபாரமான நடிப்பிற்காக நான்கு தேசிய விருதுகள் 10 தமிழக அரசு திரைப்பட விருதுகள் நான்கு ஆந்திர அரசு நந்தி விருதுகள் 19 பிலிம்பேர் விருதுகள் என பல விருதுகளை தன்னகத்தே கொண்டு இருக்கிறார் கமல்ஹாசன்.

கமல்ஹாசன் அவர்களை மக்கள் அன்போடு உலகநாயகன் கமலஹாசன் என்று அழைத்தனர். தற்போது அது பற்றி தான் கமலஹாசன் ஒரு அறிவிப்பு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அது என்னவென்றால் மக்கள் அனைவரும் என்னை அன்போடு உலக நாயகன் என்று அழைத்தார்கள். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்தது.

ஆனால் கலையை விட கலைஞன் பெரிதல்ல. நானும் பெரியவன் அல்ல. நான் என்றைக்கும் கற்றுக்கொள்ளும் ஒரு மாணவன் தான். அதனால் இனிமேல் என்னை உலகநாயகன் என்று அழைக்க வேண்டாம். கமலஹாசன் என்றோ KH ன்றோ அழைத்தாலே போதுமானது என்று அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இவரது திடீர் அறிவிப்பை பார்த்த திரையுலகினர் எதற்காக இப்படி கூறுகிறார் என்று பரபரப்புடன் பேசி வருகின்றனர்.