பொதுவாக லோகேஷ் கனகராஜ் திரைப்படம் என்றாலே ஹீரோவுக்கு நிகராக வில்லனுக்கும் காட்சிகள் கொடுக்கப்படும். அதிலும் கைதி திரைப்படத்தில் நடித்த கார்த்திக்கு இணையாக அதிக அளவில் பேசப்பட்டார் ஆக்டர் அர்ஜுன் தாஸ். இதனால் அவருக்கு படவாய்ப்புகள் அடுத்தடுத்து வந்தன.
இதனை போல் மாஸ்டர் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு இணையாக பவானி கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதி பேசப்பட்டார். மேலும் விஜயை விட விஜய் சேதுபதிக்கு தான் கெத்து அதிகம் என்பது போல படமும் அமைந்தது.
இதனால் இவை அனைத்தையும் கமல்ஹாசன் நோட்டம் விட்ட தாக விக்ரம் படம் வெளியாவதற்கு முன்பு தகவல்கள் இணையத்தில் பரவின. ஏனென்றால் விக்ரம் படத்தில் இதுபோன்ற அமையக் கூடாது என்பதில் உறுதியாக இருந்ததாகவும் தகவல்கள் பரவின.
ஆயினும் கூட கமலஹாசன் இந்த ஒரு கதாபாத்திரத்தை மறந்து விட்டதுபோல் காணப்படுகிறது. அது வேறு யாருமில்லை ரோலஸ் கதாபாத்திரத்தில் நடித்த சூர்யா தான். ஏனென்றால் படம் தொடங்கிய ஆரம்ப முதலே நடிகர் கமலஹாசன் மீது தான் அனைவரின் பார்வையும் இருந்தது.
அவரின் ஒவ்வொரு செயலும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது. இருப்பினும் கூட இந்த இருபது நிமிடத்தில் வந்த சூர்யா மொத்த படத்தையும் மறக்கும் அளவிற்கு கெத்தாக காண்பிக்கப்பட்டிருந்தனர்.
இதனால் கமலஹாசனை விட ரோலஸ் கதாபாத்திரத்தில் நடித்த சூர்யாவை பற்றியே அனைவரும் பேசிக் கொண்டு வருகின்றனர். எனவே கமல் இந்த ஒரு கதாபாத்திரத்தை மறைந்து விட்டதாகவும் நெட்டிசன்கள் கூறிக்கொண்டு வருகின்றனர்.