கமல் தயாரிப்பில் அமரன் மட்டுமல்ல… அப்பவே வெளியான சூப்பர்ஹிட் படங்களோட லிஸ்ட்..!

By Sankar Velu

Published:

கமல் தயாரிப்பில் பல படங்;கள் சக்கைபோடு போட்டுள்ளன. அவற்றில் சமீபத்தில் வெளியான படம் அமரன். சிவகார்த்திகேயன் நடிப்பில் படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. இந்தப் படம் மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக். படத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி இருவருடைய நடிப்புமே மாஸாக இருந்தது. இந்தப் படத்திற்கு முன்பே கமல் தயாரிப்பில் பல படங்கள் சூப்பர்ஹிட் ஆகியுள்ளன. அவற்றில் ஒரு சிலவற்றைப் பார்ப்போம்.

kamal sk
kamal sk

கமல்ஹாசன் நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராக பல வெற்றிப் படங்களை கொடுத்திருக்கிறார். அவரது ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் அண்மையில் அவர் தயாரித்த அமரன் படம் ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் சக்கைப்போடு போட்டு வருகிறது. சுமார் 200 கோடி வசூலைக் கடந்து திரையரங்குகளில் வசூல் வேட்டையாடி வருகிறது அமரன் திரைப்படம். இப்படத்திற்கு முன்னர் கமல் தயாரித்த 5 மாஸ்டர் பீஸ் படங்கள் பற்றி பார்க்கலாம்.

அபூர்வ சகோதரர்கள்

சிங்கீதம் சீனிவாஸ் இயக்கத்தில் கடந்த 1989-ம் ஆண்டு ரிலீஸ் ஆன படம் அபூர்வ சகோதரர்கள். இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் மூன்று விதமான கேரக்டர்களில் நடித்திருப்பார். இப்படத்தை தயாரித்ததும் கமல்ஹாசன் தான். கமலின் கேரியரில் ஒரு மைல்கல் படமாக அபூர்வ சகோதரர்கள் பார்க்கப்படுகிறது. அதிலும் அப்பு கதாபாத்திரத்தில் கமல் நடித்ததை பார்த்து பாராட்டாத ஆளே இருக்க முடியாது. அந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்து நடித்திருப்பார்.

தேவர் மகன்

கமல்ஹாசன் நடித்து, தயாரித்தது மட்டுமின்றி கதை வசனம் எழுதினார். இப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது. காலம் கடந்து கொண்டாடப்படும் தமிழ் படங்களில் இதுவும் ஒன்று. இப்படம் கடந்த 1992-ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் ஆகி வசூல் ரீதியாகவும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படத்தில் கமல்ஹாசன் உடன் கௌதமி, சிவாஜி கணேசன் ஆகியோர் நடித்திருந்தனர். பரதன் இப்படத்தை இயக்கி இருந்தார்.

விருமான்டி

கமல்ஹாசன் தயாரிப்பில் 2004ல் ரிலீஸ் ஆனது. இப்படத்தை கமல்ஹாசனே இயக்கி ஹீரோவாகவும் நடித்திருந்தார். இப்படத்தில் பக்கா தேனிக்காரராகவே வாழ்ந்திருந்தார் கமல். இப்படத்தில் தான் முதன்முதலில் லைவ் டப்பிங் செய்யப்பட்டது. இப்படம் தமிழ் சினிமாவின் பொக்கிஷமாக கொண்டாடப்படுகிறது. இப்படத்தில் கமலுடன் பசுபதி, அபிராமி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

விஸ்வரூபம்

vishwaroopam
vishwaroopam

தமிழ் சினிமாவை உலகத்தரத்துக்கு கொண்டு சென்ற படம் விஸ்வரூபம்.  2013-ம் ஆண்டு திரைக்கு வந்தது. இப்படத்தை முதலில் நேரடியாக டிவியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தார் கமல்ஹாசன். அப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த முடிவை கைவிட்டார். ஆனால் நாளடைவில் அதுவே தற்போது ஓடிடி தளங்களாக உருவெடுத்து இருக்கிறது.

விக்ரம்

இது இண்டஸ்ட்ரி ஹிட் அடித்த படம். இப்படத்திற்கு முன்னர் சுமார் 4 ஆண்டுகள் படங்களிலேயே நடிக்காமல் இருந்த கமல்ஹாசன் விக்ரம் படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுத்தார். விஜய் சேதுபதி வில்லனாக நடித்தார். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். இப்படம் கடந்த 2022-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் ரூ.450 கோடிக்கு மேல் வசூலித்து இருந்தது. படத்தின் வெற்றி தொடர்ந்து படங்களைத் தயாரிக்க உத்வேகத்தை ஏற்படுத்தியது. இதற்குப் பிறகு கமலின் தயாரிப்பில் வெளியான படம் தான் அமரன்.