கமலஹாசனின் 65வது பிறந்த நாளை முதல் முறையாக தனது சொந்த ஊரான பரமக்குடியில் கமல் கொண்டாடினார். அண்ணன் சாருஹாசன், சாருஹாசனின் மகளும் நடிகையுமான சுஹாசினி மற்றும் குடும்பத்தினர் அனைவரும் இவ்விழாவில் கலந்து கொண்டாடினர்.
இதில் இளையதிலகம் பிரபும் கலந்து கொண்டார். அப்பா சொல்வார் என் தோள் மேல் உட்கார்ந்து அனைத்தையும் கமல் பார்த்து ஆராய்ச்சி செய்றான் என்று சொல்வார். எங்க அப்பா சிவாஜியின் கலையுலக வாரிசு கமல்தான் என்றும் கமல் அண்ணன் ஜனாதிபதியாக வேண்டும் என்று பிரபு கூறியுள்ளார்.