தர்சனுக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த கமல் ஹாசன்!!

106 நாட்களுடன் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியானது நேற்று இனிதே இதன் பிரமாண்ட விருது வழங்கும் விழாவினைக் கொண்டாடியது. அதில் கலந்துகொண்ட போட்டியாளர்களுக்கு விருதுகளை வழங்கினார் கமல் ஹாசன். ஷெரினுக்கு பிக் பாஸ்வீட்டின் சிறந்த…

106 நாட்களுடன் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியானது நேற்று இனிதே இதன் பிரமாண்ட விருது வழங்கும் விழாவினைக் கொண்டாடியது.

அதில் கலந்துகொண்ட போட்டியாளர்களுக்கு விருதுகளை வழங்கினார் கமல் ஹாசன்.

8683236e0e83c9a11c12a5e74002ceb3

ஷெரினுக்கு பிக் பாஸ்வீட்டின் சிறந்த நண்பருக்கான விருது வழங்கப்பட்டது. அப்போது கமல் ஹாசன் இதை அபிராமிக்கு வழங்கவா இல்லை உங்களுக்கு வழங்கவா என்ற குழப்பம் ஏற்பட்டதாக தெரிவிக்க, சற்றும் யோசிக்காமல், அபி வா நாம் ஷேர் பண்ணிக்கலாம் என்று கூற கமல் ஹாசன் பாருங்கள் இதற்காகத்தான் இந்த விருது என்று குறிப்பிட்டு பாராட்டினார். மேடைக்கு வந்த அபிராமியுடன் விருதினைப் பகிர்ந்துகொண்டார் ஷெரின்.

தர்ஷனுக்கு அனைத்து திறமைகளையும் கொண்ட சிறந்த ஆல்ரவுண்டருக்கான விருது வழங்கப்பட்டது. கமல் ஹாசன் சார்பில் தனிப்பட்டமுறையில், கமல் ஹாசனுடைய தயாரிப்பி நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டது.

இதைப்பார்த்த அவர் தாய் ஆன்ந்தக் கண்ணீர் விட, தர்ஷனும் அழுதுவிட்டார்

அடுத்து பேசிய அவர், தான் வெளியேறியபோது பார்வையாளர்கள் அழுததே நான் வென்றதற்கு சமம் என்று கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன