வில்லத்தனத்தில் வேற லெவல் கமல்… அவ்வைசண்முகி, இந்தியன் தாத்தா, தசாவதாரம் கலந்த கலி!

By Sankar Velu

Published:

கமல் வில்லனாக நடிக்கிறார். அதுவும் வேற ஒரு நடிகரின் படத்தில் என்றதும் எக்கச்சக்க எதிர்பார்ப்பு வந்துவிட்டது. என்ன கெட்டப் என்று எதிர்பார்த்தவர்களுக்குக் ‘கலி’யாக விருந்து கொடுக்கிறார் உலகநாயகன். கல்கி 2898 AD யின் டிரைலரில் அவரது வருகை மிரட்டலாக உள்ளது. அது எப்படி இருக்குன்னு வாங்க பார்க்கலாம்.

கல்கி படத்தோட டிரைலர் வெளியாகிவிட்டது. இந்த டிரைலர்ல பூமியோட முதல் நகரம், கடைசி நகரம் என்று நம்மை மிரட்டுகிறார்கள். இதில் ‘காசி’ பெயரும் அடிபடுகிறது. அதுமட்டும் இல்லாமல் ஒரு பையன் ‘மேல தான் தண்ணீ இருக்கு. இங்க சுத்தமா இல்ல..’ன்னு சொல்றான். இன்னொரு குரல் இப்படி சொல்கிறது.

‘பூமியோட மொத்தத்தையும் உறிஞ்சிக்கிட்டான்னா அப்புறம் இங்க என்ன மிஞ்சும்..?;னு கேட்கிறது. அப்போ தான் மேல இருக்கிற அந்த சுப்ரீம் பவர் என்னன்னு காட்டுறாங்க. இப்படியே டிரைலர் முழுவதும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.

டிரைலரின் முடிவில் தீபிகா ‘இந்தப் பூமியில் பிறக்காத ஒரு உயிருக்காக இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுக்க வேண்டியிருக்கு..?’ன்னு அழுதுகிட்டே சொல்றாங்க.

அப்போ நாம் ரொம்பவே எதிர்பார்த்துக்கிட்டு இருந்த உலகநாயகன் கமல் மிரட்டலாக வருகிறார். அவர் தீபிகாவின் காதில் கிசுகிசுக்கிறார். ‘பயப்படாதே, புதிய பிரபஞ்சம் வந்து கொண்டு இருக்கிறது…’ என்கிறார். அதில் இருந்து பிஜிஎம் மியூசிக்கே வேற லெவலில் தெறிக்க விடுகிறது. கமலின் கெட்டப்பும் மிரட்டலாக உள்ளது.

Kalki
Kalki

அவரது குரலே ஒரு தடுமாற்றத்துடன், நடுக்கத்துடன், வயதான நபராகப் பேசுகிறார். உண்மையிலேயே தத்ரூபமா இருக்கு. இது நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.

கெட்டப்ப பார்க்கும் போது ஒரு இந்தியன் தாத்தா, தசாவதாரம் பாட்டி, அவ்வை சண்முகி என 3 கெட்டப்பும் சேர்ந்த மாதிரி தெரிகிறது.

இந்த கமலின் டயலாக்கும் சரி, கெட்டப்பும் சரி மிகப்பெரிய அளவில் நிச்சயமாக பேசப்படும். பேட்மேன், மேட்மேக்ஸ் நியூரி என்ற ஹாலிவுட் படங்களைப் போலவும், பிரபாஸின் முந்தைய படங்களான சாஹோ, சலார் மாதிரியும் உள்ளது.

கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என அனைத்தையும் கலந்து அடிக்கிற டிரைலர் தான் இது. கதைக்காக மாடர்னாகவும், பீரியடாகவும், பியூச்சராகவும் இருக்கிறது. இது ஒரு கலவையான டிரைலர் என்பதால் முழுவதுமே நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.

சந்தோஷ் நாராயணனோட வேற லெவல் பிஜிஎம். படத்தில் கிராபிக்ஸ் எல்லாமே பெர்பெக்டா இருக்கு. எதுவுமே கண்ணை உறுத்தல. இந்தப் படம் பிரபாஸூக்கு பாகுபலிக்கு அப்புறம் செம மாஸாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.

வைஜெயந்தி மூவீஸ் தயாரிப்பில் நாக் அஸ்வின் இயக்கிய இந்தப் படம் வரும் 27ம் தேதி திரைக்கு வருகிறது. 600 கோடி செலவில் 3 வருடங்களாக இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.