10 வருடத்திற்கு முன்பே மகாராஜா இயக்குனரைப் பாராட்டிய கமல்… இது எப்போ நடந்தது? 

திறமை உள்ளவர்கள் எங்கே வளர்ந்து நம்மை விட பெரிய ஆளாகி விடுவார்களோ என்று சக கலைஞர்கள் பொறாமையில் பாராட்டக்கூட மாட்டார்கள். அப்படி இருக்கும்போது திறமை உள்ளவர்கள் எங்கு இருந்தாலும் அவரைத் தேடிப் பிடித்துப் பாராட்டுபவர்கள் வெகு சிலர் தான். அவர்களில் ஒருவர் தான் உலகநாயகன் கமல். ஏனென்றால் ஒரு கலைஞனுக்குத் தான் இன்னொரு கலைஞனின் அருமை தெரியும்.

அந்த வகையில் கமலைப் பற்றிய ஆச்சரியத் தகவல்கள் தினம் தினம் வந்து கொண்டே இருக்கின்றன. மகாராஜா பட இயக்குனர் நித்திலன் சுவாமிநாதனை 10 ஆண்டுகளுக்கு முன்பே கமல் பாராட்டி விட்டாராம். அது என்ன என்று அறிய ஆவலாக உள்ளதா? அந்தத் தரமான சம்பவத்தை வாங்க பார்க்கலாம்.

சமீபத்தில் விஜய்சேதுபதி நடித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் மகாராஜா. இந்தப் படத்தின் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன். இவரைப் பற்றி ஒரு ஆச்சரிய தகவல் வந்துள்ளது.

உலகநாயகன் கமல் என்றாலே தீர்க்கதரிசி என்பது நமக்குத் தெரியும். இவர் நித்திலனைப் பற்றி 10 வருஷத்துக்கு முன்னாடியே பேசிவிட்டாராம். அவர் இயக்கிய குறும்படம் ஒன்றைப் பற்றி அப்போதே சிலாகித்துப் பேசினாராம். நித்திலன் என்ற ஒரு பையனுக்கு சினிமா அனுபவம் எல்லாம் கிடையாது.

Nithilan
Nithilan

ஆனால் ‘புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்’ என்ற குறும்படத்தை ரொம்பவே சூப்பரா டைரக்ட் பண்ணிருக்கார். இவர் தான் குரங்கு பொம்மையும் இயக்கியவர். மகாராஜாவில் நடித்த விஜய்சேதுபதியையும் கூட உங்க கிட்ட உள்ள துணிச்சல் அது எங்கேயோ கொண்டு போகும் என்று பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் நித்திலன் சுவாமிநாதனையும் கமல் அப்போதே பாராட்டியுள்ளது தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கமலைப் பொருத்தவரை எதையும் வரும் முன்னரே கணிப்பவர் என்பது தெரிந்த விஷயம். அந்த வகையில் ஏற்கனவே சுனாமி வருவதற்கு முன்னே அன்பே சிவம் படத்தில் அதைப் பற்றிப் பேசியிருப்பார். கொரோனா வருவதற்கு முன்பே தசாவதாரத்தில் ஒரு கொடூர வைரஸ் தாக்குதலால் உலகிற்கு ஏற்படப்போகும் பேராபத்தைப் பற்றி சொல்லியிருப்பார்.

காட்டாற்று வெள்ளம் வரும் முன்பே தேவர்மகன் படத்தில் அதை தத்ரூபமாகக் காட்டியிருப்பார். 1992ல் தென்மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கமல் ஒரு திறமைசாலி எப்படிப்பட்டவர் என்பதை அவரது இளம் பருவத்தை வைத்தே கணித்து விடுகிறார் என்பது ஆச்சரியமாகத் தான் உள்ளது.

தற்போது படம் வெளியானதும் தான் அவரது திறமைகள் திரை உலகிற்கு தெரிகின்றன. பிரபல இயக்குனர் எச்.வினோத்தும் தற்போது மகாராஜா பட இயக்குனரைப் பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.