பொதுவாக தமிழ்த்திரையுலகில் ரஜினி மற்றும் கமல் நட்பு உலகம் அறிந்ததே. இவர்களுக்குள் தொழில் போட்டி இருந்தாலும் ஒருவரை ஒருவர் எந்த இடத்திலும் விமர்சித்துப் பேசியோ, பஞ்ச் வசனங்களோ என எதுவுமே இல்லாமல் இருவரும் ஆரோக்கியமான போட்டியால் பல சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்தவர்கள். ரஜினி நடிக்க வந்த புதிதில் கமல்ஹாசன் அப்போது வளர்ந்து கொண்டிருந்த பெரிய ஹீரோவாக விளங்கினார். இருவருக்குமே சினிமா உலகில் முக்கிய அடையாளத்தினைக் கொடுத்தவர் கே. பாலச்சந்தர்.
இப்படி தன் குருநாதரின் படங்களில் சிலவற்றில் ஆரம்பகாலகட்டத்தில் ஒன்றாக நடித்தவர்கள் பின்னர் தனித்தனியே பயணம் செய்ய ஆரம்பித்தனர். ரஜினியோ ஸ்டைல், வேகம் என ஆக்சன் பாதையில் பயணிக்க கமலோ கதை, நடிப்பு, தொழில்நுட்பம் என வேறொரு கோணத்தில் இருந்தார். ஒருவர் சினிமாவினை வளர்க்க மற்றொருவர் அதை வியாபாரமாக்கினார்.
முள்ளும் மலரும் காளி
இந்நிலையில் ரஜினிக்கு அவரின் சூப்பர் ஸ்டார் என்ற இமேஜைத் தாண்டி சில நல்ல கதையம்சமுள்ள படங்கள் வந்தது. அவை தான் முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை போன்ற படங்கள். இதில் முள்ளும் மலரும் படத்தினை அடுத்த பாசமலர் என்று வர்ணிக்கும் அளவிற்கு ரஜினி, ஷோபாவின் நடிப்பு அமைந்திருக்கும்.
இந்தப் படத்தின் இயக்குநர் ரஜினியை அழைத்து கதை சொன்ன பிறகு ஷுட்டிங் செல்லும் போது ரஜினிக்கு இயக்குநர் மகேந்திரன் மீது சந்தேகம் எழ கமலிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார். கமல்ஹாசனோ ரஜினியிடம் நீங்கள் முள்ளும் மலரும் படத்தில் நடிக்க வேண்டாம். மகேந்திரன் சொல்வதை அப்படியே செய்யுங்கள் அவர் பார்த்துக் கொள்வார் என்று கூற, அதன்படி நடிப்பு என்பதை மறந்து முள்ளும் மலரும் படத்தில் காளியாக வாழ்ந்தார் ரஜினி. சூப்பர்ஸ்டாருக்கு இப்படியும் பயன்படுத்தலாம் என்று வித்திட்டபடம் தான் முள்ளும் மலரும். இதற்கு வழிகாட்டியவர் கமல்ஹாசன்.
தளபதி சூர்யா
மீண்டும் 25 வருடங்களுக்குப் பிறகு அதே தயக்கம். மாஸ் ஹீரோவாக ரஜினி மாறிவிட்ட தருணம். அண்ணாமலை, எஜமான், தர்மதுரை என மாஸ் ஹிட் படங்கள் ரஜினியை பாக்ஸ் ஆபிஸ் ஹீரோவாக மாற்ற இந்த முறை ரஜினிக்கு டஃப் கொடுத்தவர் மணிரத்னம். தளபதி என்ற பெயரைக் கேட்டதுமே ரஜினிக்கு நம்மை இன்னும் மாஸ் ஹீரோவாகக் காட்டப் போகிறார் மணிரத்னம் என்று எண்ண, அப்படியே தவிடுபொடியானது.
தளபதி 69-ல் இணையும் கன்னட சூப்பர் ஸ்டார்.. செம அப்டேட்டா இருக்கே..!
சாதாரண சட்டை, பேண்ட், பெரிய செருப்பு, கையில் காப்பு இதுதான் ரஜினியின் மொத்த காஸ்டியூமே. இந்த முறையும் ரஜினி கமலிடம் ஆலோசனை கேட்க, மணிரத்னத்தை நடித்துக் காட்டச் சொல்லுங்கள்.
அவர் என்ன செய்கிறாரோ அதை அப்படியே செய்யுங்கள் என்று கூற, ரஜினியும் அதேபோல் நடிக்க தளபதியில் சூர்யாவாக ஜொலித்தார் ரஜினி. இப்படி இந்த இரண்டு படங்களுமே ரஜினியின் திரை வரலாற்றில் அவரின் நடிப்புத் திறனுக்குத் தீனி போட்ட படங்களாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.