கமல் 60 வருட கொண்டாட்டம் இசைஞானி நடத்தும் மாபெரும் நிகழ்ச்சி

கமல்ஹாசன் 65 வயதை எட்டியுள்ளார். 5 வயதிலேயே சினிமாவுக்கு நடிக்க வந்து விட்ட கமல்ஹாசனுக்கு திரையுலகத்தில் 60வது வருடம் இது. இந்நிகழ்வை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்கனவே நடந்து முடிந்துள்ளன. எந்த வருடமும் இல்லாமல்…

கமல்ஹாசன் 65 வயதை எட்டியுள்ளார். 5 வயதிலேயே சினிமாவுக்கு நடிக்க வந்து விட்ட கமல்ஹாசனுக்கு திரையுலகத்தில் 60வது வருடம் இது.

5a9f02d3db04b1caf55143155b8b4c97

இந்நிகழ்வை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்கனவே நடந்து முடிந்துள்ளன. எந்த வருடமும் இல்லாமல் கமல் இந்த வருடம் தனது சொந்த ஊர் பரமக்குடியில் தனது பிறந்த நாளை கொண்டாடினார். தனது தந்தையின் சிலையை திறந்து வைத்தார். ராஜ்கமல் பிலிம்ஸின் விழாக்களில் கலந்து கொண்டார்.

இந்நிலையில் கமலை பெருமைப்படுத்தும் விதமாக இசைஞானி இளையராஜா தன் இசையமைப்பில் வந்த கமல் படங்களில் இருந்து மட்டும் பாடல்களை பாடும் மிகப்பெரும் இன்னிசை நிகழ்ச்சி வரும் 17ம் தேதி நடக்கிறது.

பெரியமேட்டில் உள்ள எஸ்டி ஏடி மல்ட்டி பர்ப்போஸ் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

கமல் இளையராஜா கூட்டணியில் வந்த படங்களின் பாடல்கள் எல்லாமே தித்திக்கும் தேனமுது.

அதனால் இந்த இன்னிசை விருந்தை பலரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன