நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கல்கி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது.
கல்கி ரிலீஸ் தேதி அறிவிப்பு:
மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி மகாநடி என தெலுங்கிலும் திலகம் என தமிழிலும் கீர்த்தி சுரேஷை வைத்து நாக் அஸ்வின் இயக்கிய படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த படத்தில் ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடித்திருப்பார்.
மேலும், விஜய் தேவர்கொண்டா மற்றும் சமந்தா பத்திரிகையாளர்களாக நடிகையர் திலகம் படத்தில் நடித்திருப்பர். அந்த படத்துக்காக கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருது கிடைத்தது. அதன் பிறகு எந்த ஒரு படத்துக்கும் அவருக்கு பெரிய விருது கிடைக்கவில்லை.
சுமார் ஐந்து ஆண்டுகள் கடுமையான உழைப்பை போட்டு நாக அஸ்வின் உருவாக்கியுள்ள கல்கி திரைப்படம் வரும் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகப் போவதாக தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது.
கமலுக்கு வில்லன் கமல் தான்:
இந்த ஆண்டு ஜூன் மாதம் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் வெளியாக உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். அனல் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் லைக் காடு நிறுவனம் வெளியிடாமல் இருந்தது. இந்நிலையில் பிரபாஸின் கல்கி திரைப்படம் ஜூன் 27-ஆம் தேதி வெளியாகிறது.
அதே வாரத்தில் அல்லது அதற்கு முந்தைய வாரத்தில் இந்தியன் 2 திரைப்படம் வெளியானாலும் வசூலில் மிகப்பெரிய அடியை உலக அளவில் அந்தப் படம் வாங்கும் என கணிப்புகள் வெளியாகியுள்ளன.
பிரபாஸ் நடிப்பில் கடைசியாக வெளியான சலார் திரைப்படம் வெற்றி பெற்ற நிலையில், கல்கி திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. மேலும் இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர்கள் முதல் கோலிவுட் நடிகர்கள் வரை பலரும் நடித்துள்ள நிலையில் இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகுமா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.
அதற்கு முக்கிய காரணம் கல்கி படத்தின் வில்லன் கமல்ஹாசன் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியன் 2 படத்தில் ஹீரோவாக கமல் நடித்துள்ள நிலையில், கல்கி படம் இந்தியன் 2 படத்துக்கு வசூலில் பாதிப்பை உண்டாக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்த பிரச்சனையை சமாளிக்க வேண்டும் என்றால் ஜூன் முதல் வாரத்திலேயே இந்தியன் 2 திரைப்படத்தை லைக்கா நிறுவனம் வெளியிட வேண்டும் எனக் கூறுகின்றனர்.