கல்கி படத்தில் இதை எல்லாமா சொல்லி இருக்காங்க? பழமையிலும் ஒரு புதுமையா?

By Sankar Velu

Published:

நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கல்கி 2898 AD படம் நாக் அஸ்வின் இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பிரமாதமான வரவேற்பு இருக்கிறது. படத்தைப் பார்க்கும்போது அவர்களுக்கு இது ஒரு புது அனுபவமாக இருக்கிறது. அப்படி என்னென்ன விஷயங்கள் படத்தில் புதுமையாக உள்ளன என்று பார்ப்போம்.

மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு பின்னப்பட்ட ஒரு கற்பனைக் கதை. இது ஒரு சயின்ஸ் பிக்சர். ஹாலிவுட்டுக்கே சவால் விடும் படம்.

பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல், பசுபதி, தீபிகா படுகோன், துல்கர் சல்மான் உள்பட பலர் நடித்துள்ளனர்.

பாண்டவர்களுக்கும், துரியோதனர்களுக்கும் இடையே குருஷேத்திராவில் சண்டை நடக்கிறது. அர்ச்சுனருக்கு கிருஷ்ணர் தேரோட்டி செல்கிறார். அப்போது அசுவத்தாமன் கொல்லப்படுகிறார். அவர் ஏன் கொல்லப்படுகிறார் என்பது மகாபாரதம் படிச்சவங்களுக்குத் தெரியும்.

அந்த சமயத்தில் கிருஷ்ணருக்கும், அசுவத்தாமனுக்கும் ஒரு வாக்குவாதம் நடக்கிறது. அதுல கிருஷ்ணர் அசுவத்தாமனுக்கு ஒரு சாபம் கொடுத்து விடுகிறார். அந்த சாபம் தான் இந்தக் கதை.

முதலும் அதே. முடிவும் அதேன்னு காசி நகரத்தை சொல்வாங்க. அதுல கங்கை நதியே வற்றிப் போய்க் கிடக்கு. காரணம் இது கலியுகம். கண்ணபிரானின் வரவை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் மக்கள்.

அந்தக் காலகட்டத்தில் தான் சுப்ரீம் யாஸ்கின் என்பவர் ஒரு உலகத்தை சிருஷ்டித்து அதில் ஆட்சி நடத்திக் கொண்டுள்ளார். அந்த ஆட்சிக்கு தளபதி மனஸ். இந்தக் கேரக்டரில் சாஸ்வதா சட்டர்ஜி நடித்துள்ளார். இவரோட வேலை என்னன்னு பார்ப்போம். ஒரு நாட்டுக்கு எதிர்ப்பும் இருக்கும்.

Kalki
Kalki

அவர்கள் கிளர்ச்சிக்காரர்கள். அவர்கள் சம்பாலா என்ற இடத்தில் இருக்கிறார்கள். அவர்கள் ஷோபனா, பசுபதி எல்லாம் இருக்கிறார்கள். அவர்கள் தான் கமலுக்கு எதிர்ப்பாளர்கள். அவர்கள் கர்ப்பிணிகளை எல்லாம் கொல்கிறார்கள். இளைஞர்களை எல்லாம் சிறை பிடித்துப் போகிறார்கள்.

உலகநாயகன் கமலுக்கும், பசுபதிக்கும் நடக்கிறது சண்டை. இந்த சண்டையில எப்படி அசுவத்தாமனும், பிரபாஸ்சும் வந்து சேர்கிறார்கள் என்பது இடைச்செருகல். அமிதாப்பச்சன் தான் அசுவத்தாமா. பிரபாஸ்சுக்கு என்ன கேரக்டர்னே இதுல சொல்லப்படல. அது அடுத்த பாகத்தில் தான் சொல்வாங்க. அசுவத்தாமனுக்கும், பிரபாஸ்சுக்கும் பயங்கரமா சண்டை நடக்குது.

சண்டையில பயன்படுத்துற ஆயுதங்கள், ஏவுகணைகள் எல்லாமே புதுமையா சயின்ஸ் பிக்சர் படத்தைப் பார்த்த மாதிரி இருக்கு. பிரபாஸ்சுக்கு தகவல் சொல்ல ஒரு சின்னக் கருவி இருக்கு. அதற்கு கீர்த்தி சுரேஷ் தான் ஐடியா சொல்வாரு. பிரபாஸ் யாஷ்கினுடைய காம்ப்ளக்ஸ்சுக்கு உள்ளே போக ஆசைப்படறாரு. அங்கே இவர் ஏன் போகிறார்? அங்கு நடப்பது கொடுமைக்கார ஆட்சி.

கமல் யார்? சுப்ரீம் யாஷ்கின். அவர் ஞானி. அவர் யோக முத்திரைகள் எல்லாம் பார்க்கும்போது மெய்சிலிர்க்குது. அவரது கேரக்டர் பஞ்சத்தால் வாடிப்போன துசேந்திரன் மாதிரி இருக்கு. இந்த மாதிரி மேக்கப்பில கமலைப் பார்த்திருக்க முடியாது. அதாவது வறுமையான அறிவாளி. மண்டை வழுக்கை. முகம் எல்லாம் என்னமோ மாதிரி இருக்கு.

உடம்பு ரொம்ப சப்பிப் போய் இருக்கு. அப்படிப்பட்ட கேரக்டர். அதுக்கு உயிர் கொடுக்குற மாதிரி பின்னாடி நிறைய வயர் போட்டு கனெக்ஷன் கொடுத்துருக்காங்க. அதனால தான் கமல் இயங்குறாரோன்னு சந்தேகம் வரும். ஆனால் படத்தில் முடிவில் எல்லாவற்றையும் பிடுங்கி விட்டு ரியல் யாஷ்கினா கமல் வர்றாரு.

அவர் வந்து நான் நேரடியா அஸ்வத்தாமனோடும், பிரபாஸோடும் சண்டை போடப் போகிறேன் என்கிறார். அது தான் அடுத்த பாகமாகிறது. இதுல பிரம்மானந்தம், திசாபதானிகே ஆகிய கேரக்டர்கள் தேவையே இல்லை. மற்றபடி ஹாலிவுட்டுக்கு நிகரான டெக்னாலஜி.

பிரபாஸ் ஓட்டுற காரே ரொம்ப வித்தியாசமா இருக்கும். படத்தில் காசி அந்தக் காலத்துல அவ்வளவு அருமையாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. மனிதர்களை எத்தனை வகையாகப் பார்க்கலாம் என்பதையும் படம் சொல்கிறது.

இதுல பிரபாஸ்சும், அசுவத்தாமனும் ஓர் அணி. கமல் மட்டும் தனி. இவர்களுக்கு இடையே நடக்கும் யுத்தமே கதை. அதாவது காம்ப்ளக்ஸ்சுக்கும், சம்பாலாவுக்கும் நடக்கும் சண்டை. படம் 3 மணி நேரம் ஓடினாலும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு சுவாரசியமாகப் போகிறது.