திருட வந்தவருக்கு சான்ஸ் கொடுத்த என்.எஸ்.கிருஷ்ணன்.. இப்படி ஒரு தாராள மனசா?

By John A

Published:

தமிழ்த் திரையுலகில் இப்படியும் ஓர் மனிதர் இருந்திருக்கிறரா என்பதற்கு அடையாளமாய் அவர் செய்த பல உதவிகள் இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளன. நாடகத் துறையில் முன்னோடியான பழம்பெரும் நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் நடிப்பு மட்டுமின்றி பாடல், இயக்கம், கதை என அத்தனை துறையிலும் அசத்தியவர்.

தான் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த காலகட்டங்களில் தனக்கென்று எதையும் சேர்த்து வைக்காமல் பிறருக்காக உதவியவர். மேலும் தனது கடைசிக் காலத்தில் கூட வாரிசுகளுக்கு எதையும் சேர்த்து வைக்காதவர். ஏனெனில் ஒவ்வொருவரும் தனது சொந்த முயற்சியில் முன்னேற வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டு தான் சம்பாதித்த சொத்துக்களை பிறர் நலனுக்காகவும், சமூக சேவைக்காகவும் செலவிட்டவர்.

மேலும் திரையில் சமூக சிந்தனைக் கருத்துக்களைக் காமெடியாகக் கூறி மக்களை சிந்திக்க வைத்தவர். மூட நம்பிக்கைகளுக்கு எதிராக தனது படங்களில் பேசியவர். இப்படி பல முகங்களைக் கொண்டவர்  தான் என்.எஸ்.கலைவாணர். இவரின் மனைவி மதுரமும் கணவனைப் பின்பற்றியே வாழ்ந்தவர்.

ஒருமுறை என்.எஸ்.கிருஷ்ணனும் அவரது மனைவியும் வீட்டின் மாடி முற்றத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனராம். அப்போது நள்ளிரவு என்பதால் திருடன் ஒருவன் என்.எஸ்.கே வீடு என்று தெரியாமல் அங்கு பைப் வழியாக மேலேறி வந்துள்ளார். அவர் திருட வருவதை அறிந்த என்.எஸ்.கே. உற்றுப் பார்த்து யார் என்பதை அறிந்து கொண்டார். அவர் ஒரு துணை நடிகர்.

ஒரு பாடலுக்கு ஒரு மாதமாக பயிற்சி எடுத்த எம்.ஜி.ஆர்., நடனத்தில் பட்டையைக் கிளப்பிய அந்தப் பாடல் இதானா?

அப்படி திருடவந்தவரைக் கையும் களவுமாகப் பிடித்து “வாடா..நான் சொன்ன மாதிரியே பைப் வழியா ஏறி வந்துட்ட.. இரு சாப்பாடு எடுத்து வரச் சொல்றேன்“ என்று கூறியிருக்கிறார். பின்னர் திருட வந்தவரிடம் ஏண்டா சினிமாவில் சான்ஸ் கிடைக்கலையா..? காசு பணம் இல்லையா? வீட்டுல பிள்ளைகள் பட்டினியா இருக்காங்களா என்று விசாரித்திருக்கிறார்.

பின்னர் அவரிடம் சரி நாளைக்கு ஸ்டூடியோவுக்கு வா.. சான்ஸ் வாங்கித் தாரேன் என்று கூறி அவரை அனுப்பி வைத்திருக்கிறார். மேலும் நள்ளிரவு வீட்டில் இருந்த பழைய சாதத்தை சாப்பிடச் சொல்லி அவருக்கு கை நிறைய பணமும் கொடுத்து அனுப்பியிருக்கிறார் என்.எஸ்.கிருஷ்ணன்.

இப்படி திருட வந்தவருக்கும் தனது செயலால் நல்வழிகாட்டி பாதை அமைத்துக் கொடுத்த உன்னத மனிதராகத் திகழ்ந்திருக்கிறார் என்.எஸ்.கிருஷ்ணன். இந்தத் தகவலை அவரது மகன் என்.எஸ்.கே.நல்லதம்பி கட்டுரை ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.