கார்த்தி நடித்த கைதி திரைப்படம் கடந்த வாரம் தீபாவளியன்று வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. தீபாவளிக்கு வெளியான படத்தில் நம்பர் ஒன் இடத்தில் கார்த்தியின் கைதியே முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில் இப்படத்தை ஓட வைத்த ரசிக பெருமக்களுக்கும் தன்னுடன் இணைந்து பணியாற்றியவர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் கைதி பட கதாநாயகன் கார்த்தி.
மேலும் டில்லி திரும்ப வருவார் என படத்தின் 2ம் பாகத்தை உறுதி செய்துள்ளார் கார்த்தி. இப்படத்தில் கார்த்தி டில்லி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.