கடந்த தீபாவளிக்கு வந்த படங்களில் பிகில்தான் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் பெரிய அளவில் போகாத நிலையில் அதற்கு அடுத்ததாக வந்த கைதி வசூலில் பட்டைய கிளப்பியது. படம் நன்றாக இருக்க ரசிகர்கள் தியேட்டரில் குவியத்தொடங்கினர்.
இந்த நிலையில் ஆன்லைன் முன்னணி இணையதளமான ஹாட்ஸ்டாரில் இப்படம் தயாரிப்பாளரால் வெளியிடப்பட்டது.
மூன்றாவது வாரத்திலேயே தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இப்படத்தை ஹாட்ஸ்டாரில் வெளியிட்டதால் பல தியேட்டர் உரிமையாளர்கள் தயாரிப்பாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.
இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு
“திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படங்களை 30 நாட்களில் ஆன்லைனில் வெளியிடுவது குறித்து பலரும் கவலைப்படும் நிலையை பார்க்க முடிகிறது
இந்தப் போக்கைத் தொடர்ந்தால் ஒருகட்டத்தில் மக்கள் தியேட்டருக்கு வருவது குறைந்து விடுமா? ஆம்! ஆனால் திருட்டு மற்றும் மூன்றாவது வாரத்திலேயே வசூல் குறைவு போன்ற விஷயங்களால் இதன் மூலம் மட்டுமே தயாரிப்பாளர்கள் சரிப்படுத்த முடியும்” என்று தனது ட்விட்டர் பதிவில் விளக்கம் அளித்துள்ளார் .