தமிழ் சினிமாவில் வித்தியாசமான பாணியில் வெளிவந்த கைதி!!

கார்த்தி நடிப்பில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 25 ஆம் தேதி வெளியான படம் கைதி. இந்த  திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார், இந்தப் படமான எஸ். ஆர். பிரகாஷ்பாபு மற்றும் எஸ். ஆர்.…

கார்த்தி நடிப்பில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 25 ஆம் தேதி வெளியான படம் கைதி.

இந்த  திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார், இந்தப் படமான எஸ். ஆர். பிரகாஷ்பாபு மற்றும் எஸ். ஆர். பிரபு ஆகிய இருவர் இணைந்து தயாரித்து இருந்தனர்.

நடிகர் நரேன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் உருவான பிகில் படமும் கைதி வெளியான அன்றே வெளியாக, கைதி ஃப்ளாப்தான் என்று அனைவரும் கூறி வந்தனர்.

5198e6e0727b6b5306a6153f83bf8a23

ஆனால் இதன் வலுவான கதைப் பின்னணி பிகில் படத்திற்கு பெரிய அளவில் டஃப் கொடுத்தது, படத்தின் திரைக்கதைக்கு 10 க்கு 10 கொடுக்கலாம்.

இது தமிழ் சினிமாவில் வித்தியாசமான பாணியில் எடுக்கப்பட்ட படமாகும், இப்படத்தில் பாடல்கள் என்று எதுவும் கிடையாது, பரோலில் வெளிவரும் கைதிக்கும் போதைப்பொருள் கடத்தல் கும்பலைப் பிடிக்க போராடும் போலீசாருக்குமான கதையாகும். கதையானது, 4 மணி நேரத்தில் நடக்கும் ஒரு சம்பவமாக இருக்கும்.

ஆக்ஷன் காட்சிகள் கொஞ்சம் அதிகம் என்பதைத் தவிர, வேறு எந்த மைனஸும் இல்லாத படம். ஹீரோயின் இல்லாமல், பாடல் இல்லாமல் இப்படி ஒரு ஹிட் எல்லாம் தமிழ் சினிமாவின் சாதனைதான்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன