தமிழ் சினிமாவில் சக நடிகர்களுக்கிடையே போட்டி என்பது அனைத்து காலத்திலும் உண்டு. எம்ஜிஆர்-சிவாஜி, விஜய்-அஜித் என பல நடிகர்களிடையே போட்டி என்பது இருந்து கொண்டேதான் இருந்தது மற்றும் இப்பவும் இருக்கிறது.
அந்த வகையில் தங்களது நடிப்பின் மூலம் போட்டி போட்டவர்கள் ரஜினி மற்றும் கமல். ஆனால் இவர்களுக்கிடையே இருந்த போட்டியானது ஆரோக்கியமானதாகவும் இருந்தது. ஆரம்பத்தில் இருவரும் சேர்ந்து பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ஒரு கட்டத்தில் இருவருமே தனித்தனியாக நடிக்க ஆரம்பித்தனர்.
ரஜினிக்கு தங்கையாக சுஹாசினி நடித்த படம்.. அந்த பாலிவுட் நடிகை நடிச்ச ஒரே தமிழ் படமும் இதுதான்..
அபூர்வ ராகங்கள், 16 வயதினிலே போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தனர். அப்படங்களும் வெற்றிப்படங்களாக அமைந்தன. பின்னர் இருவரும் சேர்ந்து நடிப்பது இருவரின் வளர்ச்சிக்கும் பாதிப்பை உண்டாக்கும் என எண்ணி இருவரும் தனியாக நடிக்க ஆரம்பித்தனர்.
இவ்வாறு ரஜினி நடித்த திரைப்படம்தான் புவனா ஒரு கேள்விக்குறி. அப்படத்தில் சிவக்குமார் கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படத்தில் முதலில் சிவகுமார் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் ரஜினியும் ரஜினி கதாபாத்திரத்தில் சிவகுமாரும் நடிக்கவிருந்தனராம். பின்னர் இயக்குனர் இருவரின் கதாபாத்திரத்தையும் மாற்றிவிட்டாராம்.
விபத்தால் கார்திக்குக்கு அடித்த அதிர்ஷ்டம்… அந்த படத்துக்கு பின்னாடி இவ்ளோ விஷயங்கள் இருக்கா!…
ஆனால் இப்படத்திற்கு முதலில் ரஜினிக்கு பதிலாக கமலை நடிக்கவைக்கவே இப்படத்தின் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் நினைத்துள்ளார். ஆனால் கமல் அப்படத்தின் கதையை கேட்டு நடிக்க மறுத்துவிட்டாராம்.
அந்த காலத்தில் ரஜினி வளர்ந்துவ் வரும் நடிகர் என்பதால் அவர் அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டாராம். பின்னர் அக்கதாபாத்திரத்தில் ரஜினியை நடிக்க வைத்துள்ளனர். ஆனால் அப்படம் வெற்றிப்படமாகவே அமைந்தது.
டைட்டில் கார்டில் கூட இடம் பெறாத நடிகர்… காமெடி ஜாம்பவானாக உச்சம் தொட்ட சீக்ரெட்!