தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் சூர்யா. இவரது தந்தை சிவக்குமார் தமிழ் சினிமாவில் மூத்த நடிகர் மற்றும் இவரது சகோதரர் கார்த்தி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராவார் மற்றும் இவரது மனைவி ஜோதிகாவும் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து இப்போதும் நடித்துக் கொண்டு இருக்கிறார்.
சூர்யா நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் வெளியான திரைப்படம் தான் கங்குவா. இந்த திரைப்படத்தில் சூர்யாவின் வித்தியாசமான கெட்டப்பை பார்த்ததிலிருந்து ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு இந்த படத்திற்கு இருந்து வந்தது. சூர்யாவும் இது வித்தியாசமான படமாக இருக்கும் என்று தனது பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கூறிக்கொண்டு இருந்தார்.
அது போலவே படம் வெளிவந்தது. படம் ஒரு சிலருக்கு பிடித்தது ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை என்று கூறினார்கள். முக்கியமாக இந்த படத்தில் எழுந்த விமர்சனம் முதல் 30 நிமிடம் புரியவே இல்லை மற்றும் டிஎஸ்பியின் இசை காது கிழியும் அளவுக்கு மிகவும் சத்தமாக இருக்கிறது என்று கூறினார்கள். இது சம்பந்தமாக ஜோதிகா தற்போது ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அது என்னவென்றால் கங்குவா திரைப்படம் நான் பார்த்தேன் முதல் 30 நிமிடம் வொர்க் அவுட் ஆகவில்லை நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் அதற்குப் பிறகு கதையில் நிறைய நல்ல அம்சங்கள் இருக்கிறது. கங்குவா திரைப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்களை வைப்பவர்கள் ஏன் அந்த படத்தில் உள்ள நல்ல அம்சங்களை பேசவில்லை என்று தெரியவில்லை.
பெண்களை தாழ்த்தி பேசியும் இரட்டை வசனங்கள் கொண்ட படங்களை கூட இவ்வளவு விமர்சனம் வைக்கவில்லை. அப்படி இந்த படத்தை விமர்சிப்பவர்கள் சினிமாவை உயர்த்த என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. நான் இது சூர்யாவின் மனைவியாக கூறவில்லை சினிமாவை ரசிக்கும் ஒரு ரசிகையாக நான் கூறுகிறேன் என்று இன்ஸ்ட்டாவில் பதிவிட்டு இருக்கிறார் ஜோதிகா.