ஜோஷ்வா இமை போல் காக்க விமர்சனம்.. காப்பாற்றியதா? கடுப்பேற்றியதா?..

By Sarath

Published:

ஐசரி கணேஷ் தயாரிப்பில் அவரது உறவினர் மகனான பிக் பாஸ் வருண் நடிப்பில் உருவாகியுள்ள ஜோஷ்வா இமை போல் காக்க பலத்தை பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கி இருக்கிறார்.

ஜோஷ்வா இமைபோல் காக்க படத்தில் வருணுக்கு ஜோடியாக ராஹி நடித்திருக்கிறார். இந்தப் படத்தை முடித்துவிட்டு பிக் பாஸ் முதல் சீசன் டைட்டில் வின்னர் ஆன ஆரவை அவர் திருமணம் செய்துகொண்டார். அதன் பின்னர் எந்த ஒரு படத்திலும் அவர் நடிக்கவில்லை.

ஜோஷ்வா இமை போல் காக்க விமர்சனம்:

பிக் பாஸ் சீசன் ஐந்து நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்னதாகவே இந்த படம் உருவாகிவிட்டது. அதன் பின்னர் ஆறாவது மற்றும் ஏழாவது சீஷர்கள் தற்போது நிறைவடைந்துள்ளன. அவ்வளவு கால இடைவெளிக்குப் பிறகு ஜோஷ்வா இமைபோல் காக்க திரைப்படம் ஒருவழியாக ரிலீசாகி விட்டது.

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் படங்கள் சமீபகாலமாக திட்டமிட்டபடி ரிலீஸ் ஆவது கிடையாது. ஜோஷ்வா இமைபோல் காக்க படத்தைப் போல சீயான் விக்ரம் நடித்து பல ஆண்டுகள் கடந்த துருவ நட்சத்திரம் படமும் இன்னமும் ரிலீசாகாமல் கிடப்பில் கிடக்கிறது.

ஜோஷ்வா படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், விரைவில் துருவ நட்சத்திரம் படத்திற்கும் வழி பிறக்கும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் கௌதம் மேனன். ஆனால் ஆறிப்போன கஞ்சி பழங்கஞ்சி ஆகிவிடும் என்பதுபோல தாமதமாக அவரது படங்கள் வெளியாகி வரும் நிலையில், அந்த படம் ரிலீஸ் ஆனாலும் ரசிகர்களை பெரிதாக கவர்வதில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம் தான்.

உலக அளவில் போதைக் கடத்தலில் ஈடுபடும் வில்லனை சட்டத்தின் கூண்டில் ஏற்றும் பணியை செய்துள்ள ஹீரோயின் குந்தவையை கொல்வதற்காக உலகின் தலைசிறந்த கில்லர்கள் களம் இறக்கப்படுகின்றனர். ஆரம்பத்தில் காசுக்காக கொலைகளை செய்து வரும் கூலிப்படையை சேர்ந்த ஜோஷ்வா குந்தவை காப்பற்றும் பொறுப்பில் அமர்த்தப்படுகிறார். வில்லன்களிடமிருந்து ஹீரோயினை எப்படி ஹீரோ காப்பாற்றினார் என்பதுதான் இந்த படத்தின் கதை. இதேபோன்ற கதையில் பல படங்களை பார்த்து விட்டோம். இன்னும் பல படங்கள் வரத்தான் போகின்றன. ஆனால் திரைக்கதை மற்றும் மேக்கிங் சுவாரசியமாக இருந்தால் அந்தப் படத்தை ரசிக்க முடியும். அந்த இரண்டுமே இந்த படத்தில் ரொம்பவே மிஸ்ஸிங் ஆகி இருப்பது படத்தை தியேட்டரில் உட்கார்ந்து பார்க்க முடியாத அளவுக்கு ரசிகர்களை நெளிய வைக்கிறது.

பிக் பாஸ் வருண் நடிக்கும் ஓகே ரகம் தான். ராஹி நடிப்பு வருண் நடிப்பை விட சுமார் ரகம் என்று தான் சொல்ல வேண்டும். யோகி பாபு, மன்சூர் அலிகான், டிடி நீலகண்டன், ஹீரோவாக நடித்த வில்லனாக மாறியுள்ள கிருஷ்ணா போன்றோர் தங்களுக்கு கொடுத்த பணிகளை சிறப்பாக செய்துள்ளனர்.

கௌதம் மேனன் திரைக்கதை ரொம்பவே பலவீனமாக உள்ள நிலையில் ஜோஷுவா இமை போல் காக்க படத்தை யாராலும் காப்பாற்ற முடியாத சூழல் உள்ளது. கௌதம் மேனன் ரசிகர்கள் மற்றும் பிக் பாஸ் வருண் பிரியர்கள் ஒருமுறை இந்த படத்தை ட்ரை பண்ணலாம்.

ஜோஷ்வா இமை போல் காக்க – சுவாரஸ்யம் இல்லை!

ரேட்டிங் – 2/5.