ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு என பல முன்னணி நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்து மிகவும் பிரபலமான படம் சந்திரமுகி திரைப்படமாகும். 2005 ஆம் ஆண்டு வெளியான இப்படம் 200 நாட்களுக்கும் மேல் திரையரங்கில் ஓடி வசூல் வேட்டை நடத்தியது.
இப்படத்தில் நடிகை ஜோதிகா தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி இருப்பார். மொழி, குஷி என்ற படங்களின் வரிசையில் ஜோதிகாவின் நடிப்பிற்காக பெரிதும் பேசப்பட்ட படங்களில் சந்திரமுகியும் ஒன்று. இப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆன போதிலும் இப்படம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும்போது அதற்கு கிடைக்கும் டிஆர்பி வேறு லெவலாக உள்ளது.
இந்தநிலையில் இயக்குனர் பி.வாசு இப்படத்தின் இரண்டாம் பாகத்தினை எடுக்கும் முடிவினை எடுத்துள்ளார். இப்படத்தில் ஜோதிகாவின் கதாபாத்திரம் குறித்து கேட்க, ஜோதிகா இப்படம் குறித்து யாரும் தன்னை அணுகவில்லை என்று கூறியிருந்தார்.
இந்தநிலையில் சந்திரமுகி -2 படத்தில் ஜோதிகாவிற்கு பதில் சிம்ரன் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. முதல் பார்ட்டிலேயே சிம்ரன் ஒப்பந்தமான நிலையில், திடீரென அவர் விலக அந்த வாய்ப்பு ஜோதிகாவுக்கு போனது குறிப்பிடத்தக்கது. ரசிகர்களோ சிம்ரனைவிட ஜோதிகாதான் அந்தக் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று புலம்பி வருகின்றனர்.