ஜீவா நடித்த ’கீ’ மற்றும் ’கொரில்லா’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் கடந்த ஆண்டு வெளியானது. இவற்றில் ’கீ’ திரைப்படம் மட்டும் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது
இந்த நிலையில் இந்த ஆண்டு அவரது நடிப்பில் வெளியாகும் முதல் திரைப்படமாக ’சீறு’என்ற படம் உள்ளது. வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்த இந்த படத்தில் ஜீவா வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளார்
இந்த படம் தற்போது சென்சாரில் யு சான்றிதழ் பெற்று, வரும் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியிட இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக ரிமாசுமன் என்ற நடிகை நடித்துள்ளார் மேலும் டி இமான் இசையமைத்துள்ள இந்தப் படம் ஜீவாவுக்கு வெற்றிப்படமாக அமையும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்