சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்க ஜெயம்ரவி போட்ட கண்டிஷன்கள்… இதை யாரும் எதிர்பாக்கலியே…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரை விஜய் டிவியில் தொகுப்பாளராக மிமிக்ரி செய்பவராக தனது கேரியரை ஆரம்பித்தார் சிவகார்த்திகேயன். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் தனக்கென ஒரு தனி…

SK

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரை விஜய் டிவியில் தொகுப்பாளராக மிமிக்ரி செய்பவராக தனது கேரியரை ஆரம்பித்தார் சிவகார்த்திகேயன். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் தனக்கென ஒரு தனி இடத்தை சினிமாவில் பிடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

மெரினா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் சிவகார்த்திகேயன். தொடர்ந்து காமெடி கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். அதற்கு அடுத்ததாக கமர்சியல் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் திரைப்படம் வெளியாகி 300 கோடிகளை தாண்டி வசூலித்து சாதனை படைத்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

மரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் மிகவும் பிஸியான நடிகராகி விட்டார். கைவசம் பல திரைப்படங்களை வைத்திருக்கிறார். அமரன் படத்திற்கு பிறகு தனது 23வது படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார். அடுத்ததாக 24 வது படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்கிறார். 25 ஆவது படத்தை சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு என்ற திரைப்படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.

இந்த SK 25 படத்தில் தான் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக ஜெயம் ரவி நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஜெயம் ரவி பல கண்டிஷன்களை போட்டிருக்கிறாராம். அவை என்னவென்றால் சம்பளம் 16 கோடி, கால்ஷீட் 20 முதல் 25 நாட்கள். மேலும் சிவகார்த்திகேயன் தன்னை அடிப்பது போலவோ தாக்குவது போலவோ காட்சிகள் இருக்கக் கூடாது தன்னை அசிங்கப்படுத்தக்கூடிய இழிவுபடுத்தக்கூடிய காட்சிகளும் இருக்கக் கூடாது என்று இத்தனை கண்டிஷன்களையும் கூறி ஒப்புதல் பெற்று தான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் ஜெயம்ரவி.