ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், த்ரிஷா நடிக்கும் படம் ட்ராப்பா

மலையாளத்தில் ராம் என்ற படம் தயாராகி வருகிறது. தமிழில் பாபநாசம், தம்பி உள்ளிட்ட சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய ஜீது ஜோசப் இப்படத்தை இயக்குகிறார். மோகன்லால் நடித்த பாபநாசம் படத்தின் ஒரிஜினலான த்ரிஷ்யம் படத்தில் மோகன்லால்…

மலையாளத்தில் ராம் என்ற படம் தயாராகி வருகிறது. தமிழில் பாபநாசம், தம்பி உள்ளிட்ட சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய ஜீது ஜோசப் இப்படத்தை இயக்குகிறார்.

27dcd10730393b0ac7868170af456ff1-1

மோகன்லால் நடித்த பாபநாசம் படத்தின் ஒரிஜினலான த்ரிஷ்யம் படத்தில் மோகன்லால் நடித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்ட நிலையில் மோகன்லால், த்ரிஷா நடிப்பில் புதிய படமாக ராம் உருவாகி வருகிறது.

இந்நிலையில் லாக் டவுன் காரணமாக இப்படத்தின் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் படமே ட்ராப் செய்யப்பட்டுவிட்டதாக விசமிகள் வதந்தி பரப்பி விட்டு விட்டனர்.

இந்த வதந்திக்கு முடிவு கட்டும் வகையில் ஜீத்து ஜோசப் தனது ஃபேஸ்புக்கில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார், அதில் ‘மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் ‘ராம்’ படத்தை கைவிட்டு நான் அடுத்த படத்தை திட்டமிடுகிறேன் என்ற செய்திகள் கடந்த சில நாட்களாக இணையத்தில் உலவி வருகிறது. 

கரோனா பிரச்சனை காரணமாக ராம் படத்தின் வேலைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  கேரளாவில் கொரோனா பிரச்சனைகள் குறைந்த நிலையில் ஷூட்டிங் தொடங்கலாம் என்ற அறிவிப்பினைத் தொடர்ந்து வெறொரு படத்துக்கான தொடக்கத்தில் உள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன