இதையா ரிஜெக்ட் பண்ணீங்க.. ஜெயம் ரவி படத்தில் இயக்குனர் நிராகரித்த வரிகள்.. விஜய் படத்துக்காக மாற்றி ஹிட் கொடுத்த யுகபாரதி..

By Ajith V

Published:

இந்த காலத்தில் பாடல்கள் பலவித பரிமாணங்களுக்கு மத்தியில் இருந்தாலும் உருவாகும் பாடல்கள் வரிகளும், ராகங்களும் புரியாத அளவிற்கு தான் வேகமாக அமைந்து வருகிறது. சில பாடல்கள் ஆரம்பத்தில் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் அதனை தொடர்ந்து கேட்கும் சமயத்தில் ஒருவித சலிப்பு தான் உருவாகி விடுகிறது. ஆனால் இதையெல்லாம் தாண்டி அவ்வப்போது சில நிறைய நல்ல பாடல்களும் வெளியாகி வருவது என்பதையும் நிச்சயம் நம்மால் மறுக்க முடியாது.

ஆனால் இதெல்லாம் தாண்டி கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து தமிழ் படங்களிலும் வெளியாகும் பாடல்கள், அந்த அளவுக்கு அற்புதமாக அமைந்திருக்கும் என்பது தான் நிதர்சனமான உண்மை. ராகங்கள் தொடங்கி பாட்டின் வரிகள் வரை அப்படியே ஆனந்தமாக இருப்பதால் ரசிகர்களும் மிகுந்த உற்சாகத்துடன் இதுபோன்ற பாடல்களை கண்டுபிடித்து கேட்டு வந்தனர்.

அப்படி இந்த பாடல் வரிகள் அனைத்தும் மிகப்பெரிய ஹிட் ஆவதற்கு பாடல் ஆசிரியர்களும் முக்கியமான காரணமாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் சமீப காலங்களில் யுகபாரதி, கபிலன், கார்க்கி உள்ளிட்ட பலரும் பாடல்களை மிக நேர்த்தியாக வரிகள் அமைத்து எழுதி வரும் சூழலில், ஜெயம் ரவிக்காக யுகபாரதி எழுதிய வரிகள் நிராகரிக்கப்பட்டு பின்னர் அது விஜய் படத்தில் பயன்படுத்தப்பட்டதை பற்றி தற்போது பார்க்கலாம்.

மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகி இருந்த திரைப்படம் தான் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி. அவரது சகோதரர் ஜெயம் ரவி நாயகனாக நடிக்க ஸ்ரீகாந்த் தேவா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். அப்போது ஒரு காதல் பாடலில் வரிகள் வேண்டுமென யுகபாரதியிடம் கேட்க, அவர் கண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் கண்டேன் என்ற வரிகளை எழுதியுள்ளார்.

இதனைக் கேட்டதும் இன்னும் கொஞ்சம் டிரெண்டான வரிகள் வேண்டுமென ஸ்ரீகாந்த் தேவா மற்றும் மோகன் ராஜா ஆகியோர் கேட்க அய்யோ அய்யோ உன் கண்கள் அய்யய்யோ என வரிகளை எழுதி கொடுத்தார். இதே அவர்களுக்கு இஷ்டப்பட ஐயோ ஐயோ என்ற பாடலும் உருவாகி இருந்தது. ஆனால் இன்னொரு பக்கம் அவர் ஏற்கனவே எழுதிய கண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் கண்டேன் என்ற பாடல் வரிகளை அப்படியே வைத்திருந்தார்.

அப்போது விஜய் நடிப்பில் அந்த சமயத்தில் உருவாகி வந்த மதுர என்ற திரைப்படத்திற்காக வித்யாசாகர் யுகபாரதியின் வரிகளை அணுகியுள்ளார். எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்திற்காக நிராகரிக்கப்பட்ட வரிகளை மதுர படத்திற்காக அவர் எழுத அது அனைவருக்கும் பிடித்து போய் சூப்பர் ஹிட் பாடல் ஆகவும் மாறி இருந்தது குறிப்பிடத்தக்கது.