ஜவான் அதிகாரப்பூர்வ வசூல் அறிவிப்பு!.. இந்தியாவின் நம்பர் ஒன் பாக்ஸ் ஆபிஸ் இயக்குநராக மாறிய அட்லீ!..

By Sarath

Published:

வசூல் சாதனையில் இயக்குநர் ராஜமெளலிக்கே போட்டி போடும் அளவுக்கு தமிழ் சினிமா இயக்குநர் அட்லீ வளர்ந்திருப்பது ஒட்டுமொத்த தமிழ் திரையுலகத்துக்கும் மிகப்பெரிய பெருமையை தேடித் தந்துள்ளது.

இயக்குநர் ஷங்கருக்கு முன்னதாக அட்லீ 1000 கோடி வசூல் இயக்குநராக மாறுவார் என்பது தெளிவாக தெரிகிறது. ஜவான் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை எந்தவொரு ஒளிவு மறைவுமின்றி ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் தொடர்ந்து அறிவித்து வருகிறது.

ஜவான் 2 நாள் வசூல்:

முதல் நாளில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய்சேதுபதி, பிரியாமணி, சஞ்சய் தத், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வெளியான ஜவான் திரைப்படம் 129.6 கோடி ரூபாயை வசூல் ஈட்டியதாக அறிவித்த நிலையில், தற்போது அதிரடியாக 2வது நாளில் எந்தவொரு பின்னடைவும் இன்றி அதே போல அதிரடியான வசூலை ஜவான் திரைப்படம் ஈட்டியுள்ளது.

2 நாட்களில் ஒட்டுமொத்தமாக உலகளவில் ஜவான் திரைப்படம் 240.47 கோடி ரூபாயை வசூல் ஈட்டியிருப்பதாக தற்போது ரெட் சில்லீஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து ஷாருக்கான் ரசிகர்களையும் அட்லீ ரசிகர்களையும் கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளது.

சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் மிகப்பெரிய வசூல் வேட்டையை ஜவான் திரைப்படம் செய்ய உள்ள நிலையில், முதல் வார முடிவில் 500 கோடிக்கும் அதிகமான வசூலை இந்த படம் வசூல் செய்து புதிய ரெக்கார்ட்டை படைக்கப் போவதாக பாக்ஸ் ஆபிஸ் வல்லுநர்கள் தகவல் தெரிவித்து வருகின்றனர்.

அட்லீயின் அரசாங்கம்:

இந்திய சினிமாவில் 1000 கோடி வசூலை ஈட்டிய ராஜமெளலி, பிரசாந்த் நீல் வரிசையில் தமிழ் சினிமாவில் இருந்து முதல் ஆளாக இயக்குநர் அட்லீ இடம்பெற போகிறார் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஜவான் திரைப்படம் வெளியாகும் முன்னர் வரை இந்த படத்திற்கான எந்தவொரு எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இல்லாத நிலையில், தியேட்டரில் ஷாருக்கானை பல விதமான தோற்றங்களில் பட்டைய கிளப்பும் ஆக்‌ஷன் கூஸ்பம்ப்ஸ் காட்சிகளுடன் இயக்குநர் அட்லீ காட்டியது தான் இப்படியொரு மிரட்டலான வசூல் வேட்டையை இந்த படம் செய்ததற்கான காரணம் என்கின்றனர்.

இயக்குநர் அட்லீ இத்தனை பெரிய வசூல் வேட்டையை நடத்திய நிலையில், அடுத்து விஜய்யை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ படத்திற்கு மேலும், அதிக பிரஷர் குவிந்து இருப்பதாகவும் லோகேஷ் கனகராஜும் அட்லீயை தாண்டி 1000 கோடி கிளப்பில் தடம் பதிப்பாரா என்பதை காண விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். அக்டோபர் 5ம் தேதி இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், அதன் பின்னர் லியோ படத்தின் பிசினஸ் சூடு பறக்கும் என தெரிகிறது.