தமிழ் சினிமாவில் விஜய் எப்படிப்பட்ட இடத்தில் இருக்கிறார் என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. முன்னணி நடிகர்களாக இருக்கும் மற்ற அனைவரது திரைப்படமும் மக்கள் மத்தியில் சிறப்பாக இருக்கிறது என்ற விமர்சனத்தை பெற்றால் மட்டும் தான் வசூல் ரீதியாகவும் அந்த படங்கள் வெற்றியடையும். பதிலுக்கு அந்த திரைப்படங்கள் மிக சுமாராக இருந்தால் நிச்சயம் அந்த படம் வசூல் ரீதியாகவும் பெரிய தோல்வி அடையும்.
ஆனால் அப்படியே விஜய் என வரும்போது அவரது திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் கூட பல கோடி ரூபாய் வசூல் செய்து தமிழ் சினிமாவின் முக்கிய இடத்தையும் பிடிக்கும். விஜய் நடிப்பில் இதற்கு முன்பு வெளியான கோட் திரைப்படமும் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை தான் பெற்றிருந்தது. ஆனாலும் அந்த திரைப்படம் வசூல் ரீதியாக நிறைய சாதனைகளை அடித்து நொறுக்கி தன்வசமாக்கி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
அரசியலில் முழு நேரமாக ஈடுபடுவதற்கு முன்பாக கடைசி திரைப்படத்தில் நடிக்கவுள்ள விஜய், ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 69 படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். இதன் படப்பிடிப்பு பணிகளும் தற்போது நடைபெற்று வரும் நிலையில், விஜய்யுடன் பாபி டியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்து வருகின்றனர். 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த திரைப்படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஜேசன் சஞ்சயின் முதல் படம்
இதனிடையே, விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருக்க, அவரது மகன் ஜேசன் சஞ்சய் வெளிநாட்டிற்கு சென்று திரைப்பட இயக்கம் தொடர்பாக சில படிப்பையும் பயின்றிருந்தார்.எ அவரது ஷார்ட் பிலிம் உருவாக்கப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் அதிகம் வைரலாகி இருந்தது.
அப்படி ஒரு சூழலில் தமிழில் ஒரு புதிய திரைப்படத்தின் மூலம் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கவுள்ள நிலையில், இதில் நடிகராக யார் நடிப்பார்கள் என்பது பற்றி எந்தவித அறிவிப்பும் வெளியாகாமல் இருந்து வந்தது.
ஹீரோவாக களமிறங்கும் சுதீப்
அப்படி ஒரு சூழலில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் கவின் நாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் தயாரிப்பு நிறுவனம் இது தொடர்பாக எந்தவித அறிவிப்பையும் வெளிப்படுத்தாமல் இருக்க தற்போது இதுபற்றி உறுதியான தகவல்களும் கிடைத்துள்ளது. லைகா நிறுவனம் இது தொடர்பாக மோஷன் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் ஜேசன் சஞ்சய் இயக்கும் திரைப்படத்தில் இளம் நடிகர் சுதீப் கிஷன் நாயகனாக நடிக்க உள்ளார்.

மேலும் எடிட்டராக பிரவீன் கே. எல்லும், இசையமைப்பாளராக தமனும் பணிபுரியவுள்ளது உறுதியாகி உள்ள நிலையில், படக்குழுவினர் தொடர்பான மற்ற தகவல் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நான் கடந்த 7 ஆண்டுகளாக பல வலைத்தளங்களில் கிரிக்கெட், சினிமா தொடர்பான செய்திகளை சுவாரஸ்யம் குறையாமல் வாசகர்கள் விரும்பும் வகையில் எழுதி வருகிறேன். இணையத்தில் இன்று ஏராளமான செய்திகள் சரியான விவரங்கள் இல்லாமல் வெளியாகி வரும் சூழலில் முடிந்த அளவுக்கு சிறந்த செய்திகளை கொடுப்பதற்கு நான் முன்னுரிமை கொடுத்து எழுதி வருகிறேன்.

