ஜான்வி கபூர் இந்திசினிமாவில் ஹீரோயினாக வலம் வருகிறார். தமிழ்த் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாகி அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியாக சினிமா வாழ்க்கையில் நுழைந்து முன்னணி நடிகையாக வலம் வலம்வந்தார் ஸ்ரீதேவி.
80 களில் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் ஸ்ரீதேவி ரஜினி, கமல் போன்ற முன்னணி நாயகர்களுடன் ஜோடி போட்டு பல படங்கள் நடித்துள்ளார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்திப் படங்களிலும் நடித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள சிவகாசியைச் சொந்த ஊராகக் கொண்ட ஸ்ரீ தேவி 1996 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் போனி கபூரைத் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்களில் ஒருவர்தான் ஜான்வி கபூர்.
300 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள ஸ்ரீ தேவிக்கு தன் மகளை நடிகையாக்கிப் பார்க்க வேண்டும் என்று ஆசை வர, சினிமாவில் களமிறக்கினார்.
முதல் படமான தடக் படத்திலேயே சிறந்த அறிமுக நாயகிக்கான விருதினைப் பெற்றார் ஜான்வி. ஆனால் இதனைப் பார்க்க தன் அம்மா இல்லையே என அவர் அழுதது பலரையும் துக்கத்தில் ஆழ்த்தியது.
தற்போது கொரோனாவால் ஊரடங்கில் இருந்துவரும் ஜான்வி, விதவிதமாக போட்டோஷுட் நட்த்தி வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். அந்தவகையில் அழகாக மேக் அப் போட்டி சூப்பரான போட்டோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். இது பல ஆயிரக்கணக்கிலான லைக்குகளைப் பெற்றுள்ளது.