ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் 2026 பொங்கல் வரை தள்ளிப்போனது ஏன்? இதுல ஏதாவது சூட்சமம் இருக்கா?

விஜய் தனது 69 வது படமாக எச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு இன்னும் ஒரு சில தினங்களில் முடிந்து விடும். விஜய் நாளை முதல் பொதுக்குழுவைக் கூட்டுகிறார்.…

jananayagan

விஜய் தனது 69 வது படமாக எச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு இன்னும் ஒரு சில தினங்களில் முடிந்து விடும். விஜய் நாளை முதல் பொதுக்குழுவைக் கூட்டுகிறார். இதில் அரசியல் சம்பந்தமான முக்கிய முடிவுகளை எடுப்பார் என்று தெரிகிறது. விஜயைப் பொருத்தவரை அவர் மார்க்கெட்டில் உச்சநிலையில் இருக்கும்போதே சினிமாவில் இருந்து முற்றிலும் விலகி அரசியலுக்கு வந்துள்ளார்.

இதை யாரும் எதிர்பார்க்கவே இல்லை. தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சியை ஜரூராக துவங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இவரது ரசிகர்களின் எண்ணிக்கை எல்லாமே வாக்குகளாக விழுந்தால் இவர் அரசியலிலும் சினிமாவைப் போல சாதிப்பார். ஆனால் சினிமா வேறு. அரசியல் வேறு. வரும் 2026ல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாகவும் அறிவித்துள்ளார்.

கூட்டணி உண்டா? அப்படின்னா யாரோடு என்ற கேள்வியும் எழுகிறது. அதே நேரம் அவரது கடைசிபடமான ஜனநாயகன் முழுக்க முழுக்க அரசியல் பேசும் அளவில் இருக்கும் என்றும் அவரது அரசியல் வருகைக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் ரிலீஸ் இந்த ஆண்டு இறுதியில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டபோது படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்குத் தள்ளிப் போனது.

ஓடிடி தளங்கள் தன்னோட இலக்கை எட்டிவிட்டதாகவும் இனிமே 2026ம் ஆண்டுதான் படங்களை வாங்க இருப்பதாகச் சொன்னதால ஜனநாயகன் படத்தின் ரிலீஸை ஜனவரிக்குத் தள்ளி வச்சிட்டாங்கன்னு சொல்றாங்களே. அது உண்மையான்னு வாசகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.

ஜனநாயகன் படத்தின் வெளியீடு அதனால தள்ளிப்போனதுக்குக் கூட அதுதான் முக்கியமான காரணம் என்பது உண்மைதான் என்று தெரிவித்துள்ளார் சித்ரா லட்சுமணன். போஸ்டரில் எம்ஜிஆரை மாதிரி சாட்டையை சுழற்றி நான் ஆணையிட்டால்னு சொல்றாரு விஜய். அரசியலிலும் அப்படியே நடந்தால் சரிதான்.