ஹரி- சூர்யா கூட்டணியில் உருவான இந்தச் சிறப்பான திரைப்படம் வெளியாகி 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது…

By Meena

Published:

ஹரி தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். பல்வேறு இயக்குனர்களுக்கு உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் குறிப்பாக இயக்குனர் சரணுக்கு ‘அமர்க்களம்’, ‘பார்த்தேன் ரசித்தேன்’ போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

2002 ஆம் ஆண்டு பிரஷாந்த், சிம்ரன் ஆகியோரை வைத்து ‘தமிழ்’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 2003 ஆம் ஆண்டு ‘சாமி’ திரைப்படத்தை இயக்கினார். இப்படத்தில் விக்ரம், த்ரிஷா,விவேக் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் மாபெரும் வெற்றிப் பெற்று வணீக ரீதியாகவும் வசூல் சாதனை படைத்தது. இதன் வாயிலாக ஹரி அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.

தொடர்ந்து கோவில் (2003), அருள் (2004), ஐயா (2004), ஆறு (2004), தாமிரபரணி (2007), வேல் (2007), சிங்கம் (2010), வேங்கை (2011), சிங்கம் 2(2013), சிங்கம் 3 (2016), சாமி 2 (2018), யானை (2021) போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். ஹரி அவர்கள் இயக்கும் திரைப்படங்கள் பெரும்பாலானவை தென் தமிழகத்தை சுற்றி நடப்பதை போலவே கதைக்களத்தை அமைத்திருப்பார். அரிவாள் இவரது படங்களில் பெரும்பாலும் இடம்பெறும்.

ஹரி இயக்கிய சிறப்பான திரைப்படங்களுள் ஒன்று சிங்கம். 2010 ஆம் ஆண்டு மே 28 அன்று இத்திரைப்படம் வெளியானது. இதில் சூர்யா, அனன்யா, மனோரமா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடித்திருந்தனர. இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டானது. சூர்யா அவர்களுக்கும் அவரது கேரியரில் சிங்கம் திரைப்படம் முக்கியமான இடத்தைப் பிடித்தது.

அதே நேரத்தில் சிங்கம் படத்திற்காக சூர்யா வைத்திருந்த மீசை ட்ரெண்ட் ஆனது. அடுத்தடுத்து வெளியான சிங்கம் 2, சிங்கம் 3 ஆகிய படங்களும் மெகாஹிட் ஆனது. சிங்கம் 4 பாகத்திற்காக மக்கள் ஏதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். அப்படிப்பட்ட சிங்கம் திரைப்படம் வெளியாகி தற்போது 14 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

Tags: ஹரி