டாக்டர் பட்டம், ஹெலிகாப்டர்!.. அதெல்லாம் அப்போ.. சிம்புவுக்கு இப்போ எதிரியாக மாறிய ஐசரி கணேஷ்!..

By Sarath

Published:

மாநாடு படத்தின் வெற்றியை பார்த்துவிட்டு நடிகர் சிம்புவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளை தருகிறேன் என தானாக முன்வந்து தலையைக் கொடுத்து பெரிய சிக்கலில் சிக்கிக் கொண்டார் வேல்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை தயாரித்த ஐசரி கணேஷ் நிறுவனம் அந்தப் படத்தில் ஆடியோ வெளியீட்டு விழாவுக்காக ஹெலிகாப்டரை எல்லாம் ஏற்பாடு செய்திருந்தது.

சிம்புவுக்கு வில்லனான ஐசரி கணேஷ்?:

ஆனால், கடைசி நேரத்தில் சிம்பு அந்த ஹெலிகாப்டரில் வர மறுந்து விட்டார். அதற்கு பதிலாக தயாரிப்பாளரான ஐசரி கணேஷ் ஹெலிகாப்டரில் வந்து ஜம்முனு இறங்கினார். மேலும், தனது தயாரிப்பு நிறுவனத்தில் அடுத்தடுத்து படங்களில் நடிக்க உள்ள சிம்புவுக்கு பட்டத்தையும் கொடுத்து அழகு பார்த்தார் ஐசரி கணேஷ்.

கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான பல படங்கள் தயாரிப்பாளர்களை காவு வாங்கி வரும் நிலையில், சிம்பு மற்றும் ஐசரி கணேஷ் சிக்கித் தவித்தனர். அதன் காரணமாகவே சிம்பு மற்றும் கௌதம் மேனன் இடையே மோதல் வெடித்தது.

ஐசரி கணேஷ் தயாரிப்பில் கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் படத்தில் நடிக்கவும் சிம்பு ஒப்பந்தம் செய்த நிலையில், கோகுல் சொன்ன கதையில் நம்பிக்கை இல்லாத காரணத்தினால் அந்தப் படத்தில் நடிக்க மாட்டேன் என மறுத்து விட்டார். கோகுல் இயக்கிய சிங்கப்பூர் சலூன் திரைப்படமும் படு தோல்வியை சந்தித்தது.

நடிகர் சிம்பு ஐசரி கணேஷ் டீமில் இருந்து எஸ்கேப் ஆகி கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தில் தற்போது சிக்கியிருக்கிறார். எஸ்டிஆர் 48 படம் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தக் லைஃப் படத்தில் அவரை வைத்து நடிக்க வைத்து வருகிறார் கமல்ஹாசன்.

இந்நிலையில், சிம்பு நடிக்கக் கூடாது என்றும் அவருக்கு மீண்டும் ரெட் கார்டு போர்டு வீட்டில் உட்கார வைக்க வேண்டும் என ஐசரி கணேஷ் அதிரடி காட்டி வருவது கோலிவுட்டில் அதிர்ச்சியை கிளப்பி உ ள்ளது.

ஹெலிகாப்டர், டாக்டர் பட்டம் எல்லாம் சும்மாவா கொடுத்தாரு, அதன் மூலம் துட்டு சம்பாதிக்கலாம் என்கிற நோக்கத்துடன் தான் கொடுத்திருப்பார். ஆனால், அதற்கே சிம்பு வேட்டு வைத்தால் இனிமேல் அவருக்கு நிஜ வில்லனே நான் தான் என ஐசரி கணேஷ் அதிரடி காட்டி வருகிறார்.

புதிய படங்களை இயக்கும் டைரக்டர்கள் எல்லாம் இதையெல்லாம் நோட் பண்ணி ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணினால் கூட அந்த படம் கெளதம் மேனன் இயக்கிய ஜோஷ்வா படத்தை விட நல்லாவே ஓடும் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.