மம்முட்டி மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான புகழ்பெற்ற நடிகராவார். கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக இன்றளவும் நடித்துக் கொண்டு இருக்கிறார். தமிழில் மறுமலர்ச்சி, ஆனந்தம், தளபதி போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார் மம்மூட்டி. இவருக்கு பல தமிழ் ரசிகர்களும் இருக்கிறார்கள்.
1998 ஆம் ஆண்டு மம்முட்டி, தேவயானி, மனோரமா, ரஞ்சித், மன்சூர் அலிகான் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் மறுமலர்ச்சி. இந்த திரைப்படத்தை மறுமலர்ச்சி பாரதி இயக்கி இருப்பார். தயாரிப்பு ஹென்றி. இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வணீக ரீதியாக வெற்றி பெற்ற திரைப்படம் ஆகும்.
இந்த திரைப்படத்தில் வரும் நன்றி சொல்ல உனக்கு என்ற பாடல் இன்றளவும் எவர்க்ரீன் பாடலாக இருக்கிறது. இத்திரைப்படத்தை பற்றி ஒரு தகவல் என்னவென்றால் இப்படத்தில் நாயகனாக மம்முட்டி நடிப்பதற்கு முன்பாக விஜயகாந்த் அவர்கள் தான் நடிப்பதற்காக கமிட்டாகி இருந்தாராம்.
இப்படத்தின் கதையை விவரித்து இயக்குனர் கூறும் போது இந்தப் படத்தில் ஜாதி ரீதியான ஒரு சில விஷயங்கள் வருவதை கேட்டவுடன் இந்த படத்தில் என்னால் நடிக்க முடியாது என்று விஜயகாந்த் விலகி விட்டாராம். அதற்கு பிறகு தான் இப்படத்தில் மம்முட்டி கமிட்டாகி நடித்திருக்கிறார். எந்த வகையிலும் மக்களுக்கு தவறான செயலை எடுத்து நாம் கூறக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தவர் விஜயகாந்த்.