அய்யோ இன்னும் 200 நாளா? புலம்பும் பார்வையாளர்கள்!!

இன்றுடன் பிக் பாஸ் முடியவுள்ளநிலையில், நேற்றைய நிகழ்ச்சியில் அழகு ஒப்பனையாளர்கள் உள்ளே வந்து போட்டியாளர்களுக்கு மேக்கப் செய்துவிட்டனர். அதன்பின்னர் அவர்களுக்கான போட்டொஷூட் நடைபெற்றது, அனைவரும் தனித்தனியாகவும் குரூப்பாகவும் போட்டோஷூட் பண்ணினர். அடுத்து மக்கள் முன்…

இன்றுடன் பிக் பாஸ் முடியவுள்ளநிலையில், நேற்றைய நிகழ்ச்சியில் அழகு ஒப்பனையாளர்கள் உள்ளே வந்து போட்டியாளர்களுக்கு மேக்கப் செய்துவிட்டனர்.

அதன்பின்னர் அவர்களுக்கான போட்டொஷூட் நடைபெற்றது, அனைவரும் தனித்தனியாகவும் குரூப்பாகவும் போட்டோஷூட் பண்ணினர்.

7aa7319452ccb9471a08bd936000e1ca

அடுத்து மக்கள் முன் தோன்றிய கமல் ஹாசன் இன்னும் ஒரே நாளில் பைனல்ஸ், அனைவரும் இதில் நாம் ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைக்க போகிறோம், அந்த நாமுக்குள் இருக்கும் உங்களுக்கு நன்றி என்றார்.

105 நாட்கள் முடிந்துவிட்டதே, இன்னும் 200 நாட்கள் காத்திருக்க வேண்டுமே என்ற கவலை பலர் மனதில் உள்ளது. கவலை வேண்டாம், இப்போதைக்கு இந்த நிகழ்ச்சியினை மகிழ்ச்சியாக கொண்டாடுவோம் என்றார்.

உண்மையிலயே இந்த 100 நாட்கள் மக்களைக் கட்டிப்போட்ட விஷயமாக இருந்தது இந்த நிகழ்ச்சி, சீரியல்களையும்கூட ஒதுக்கிவைத்துவிட்டு, இரவு 9.30 மணிக்கு அனைவரும் தயாராகிவிடுவர்.

வார இறுதி என்றால் சொல்லவே வேண்டாம், கமல் ஹாசன் பேசுவதைக் கேட்கவே பிக் பாஸ் பார்க்காதவர்களும் பார்ப்பர். இனி 200 நாட்களுக்குப் பிறகு தான் பிக் பாஸின் குரலைக் கேட்க முடியும், என பலரும் புலம்பி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன