தமிழ் சினிமாவின் ஜாம்பவான் என்றால் அது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் தான். ஒவ்வொரு படத்தில் நடிக்கும் பொழுது அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார். அப்படி ஒரு நடிப்பு அரக்கனாகவே தமிழ் திரையுலகில் வாழ்ந்தவர்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் நாட்டிய பேரொளி நடிகை பத்மினியும் தமிழ் சினிமாவில் வளர்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில் 1952 ஆம் ஆண்டு கண்ணதாசன் தயாரிப்பில் என் எஸ் கிருஷ்ணன் இயக்கத்தில் “ பணம்” என்ற படத்தில் சிவாஜி கணேசனும் பத்மினியும் இனணந்து நடித்தனர்.
அந்த படத்தின் முதல் காட்சி படபிடிப்பே சிவாஜி- பத்மினி கல்யாணம் தான். சிவாஜி அவர்கள் பத்மினியின் கழுத்தில் தாலிகட்டிய காட்சி படமாக்கப்பட்டது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இந்த காட்சி படமாக்கப்பட்ட அன்று தான் சிவாஜி கணேசனின் திருமண நாள். படபிடிப்பை முடித்து விட்டு சிவாஜி அவர்கள் தம் திருமண வைபவத்தில் கலந்து கொண்டு கமலா என்கிற பெண்ணை கரம் பிடித்தார்.
அதன் பின்பு சிவாஜி யும் பத்மினியும் இணைந்து 60 படங்களுக்கு மேல் நடித்துள்ளனர் . இருவரின் படபிடிப்பு தளத்தில் சிவாஜி உட்பட அங்கிருப்பவர்களும் சிவாஜியின் முதல் மனைவி பத்மினி என்று கேலி செய்வார்களாம். அதை பத்மினியும் ரசித்து மகிழ்வாராம். அந்த அளவுக்கு சிவாஜியின் மீது அதீத அன்பு வைத்திருந்தார் பத்மினி. சிவாஜி அவர்கள் கட்டிய தாலியை பல மாதங்கள் கழட்டாமல் இருந்தார் என்று குட்டி பத்மினி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
சினிமாவில் மிகவும் கொண்டாடப்பட்ட ஜோடிகளில் ஒன்று சிவாஜி-பத்மினி ஜோடி ஆகும். இவர்கள் இணைந்து நடித்த படங்கள் பலவும் சூப்பர்ஹிட் ஆகியுள்ளது. இவர்கள் உண்மைலேயே திருமணம் செய்திருக்கலாம் என்று சினிமா ரசிகர்கள் ஏங்கும் அளவிற்கு இவர்கள் நடிப்பும் இவர்களுக்கு இடையிடையேயான கெமிஸ்ட்ரியும் மக்களை கவர்ந்தது. சிவாஜி கணேசன் அவர்களுடன் நடித்தது என்னுடைய பாக்கியம் என்று பல நேர்காணலில் பத்மினி அவர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.