சிவகங்கை மாவட்டத்தில் பிறந்த பேரரசு தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார். அதிரடி- மசாலா திரைப்படங்கள் எடுத்து பிரபலமானவர். இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராக, பாடலாசிரியராக மற்றும் பாடகராக தமிழ் சினிமாவில் பணியாற்றியவர் பேரரசு.
1990 ஆம் ஆண்டு ‘சாத்தான் சொல்லை தட்டாதே’ என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து ‘எதிரும் புதிரும்’, ‘அரசாட்சி’, ‘சிவகாசி’, ‘திருப்பதி’, ‘தருமபுரி’, ‘பழனி’, ‘திருவண்ணாமலை’, ‘ஒன்பதுல குரு’, போன்ற திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றினார்.
2005 ஆம் ஆண்டு ‘திருப்பாச்சி’ திரைப்படம் வாயிலாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்த்தில் விஜய், த்ரிஷா நாயகன் நாயகியாக நடித்திருந்தனர். இப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றது. முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தை ஈர்த்தார் பேரரசு. ‘திருப்பாச்சி’ படத்தின் அனைத்து பாடல்களும் கூட ஹிட்டானது.
தொடர்ந்து ‘சிவகாசி’, ‘திருப்பதி’, ‘தருமபுரி’, ‘பழனி’, ‘திருவண்ணாமலை’, ‘திருத்தணி’ போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவரது படங்கள் பெரும்பாலானவை அதிரடி படங்க தான். மேலும் பேரரசு இயக்கிய அனைத்து திரைப்படங்களும் நல்ல விமர்சனங்களை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது, இளையராஜா அவர்களின் காப்பிரைட் விவகாரம் தொடர்பாக இயக்குனர் பேரரசிடம் இசை பெரிதா, பாடல் வரிகள் பெரிதா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு விளக்கமளித்த பேரரசு, ஒரு பாடலுக்கு இசை என்பது அந்த பாடல் வெற்றி பெறுவதற்கு உதவும். அதே போல் பாடல் வரிகள் அந்த பாடல் காலம் முழுவதும் அழியாமல் இருக்க உதவும். அதனால் இவ்விரண்டையும் பிரிக்க முடியாது என்று கூறியுள்ளார் இயக்குனர் பேரரசு.