நடிகை அபிநயாவின் கணவரும் அவரைப் போலவே மாற்று திறனாளியா….? அவரது தந்தை கொடுத்த விளக்கம்…

நடிகை அபிநயா தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான நடிகை ஆவார். இவர் பிறவியிலிருந்தே சரியாக பேச வராமையும் காது கேட்கும் திறன் குறைபாடும் கொண்டவர். ஆனாலும் தனது அபாரமான நடிப்பினால் பல ரசிகர்களை கொண்டவர்.…

abinaya

நடிகை அபிநயா தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான நடிகை ஆவார். இவர் பிறவியிலிருந்தே சரியாக பேச வராமையும் காது கேட்கும் திறன் குறைபாடும் கொண்டவர். ஆனாலும் தனது அபாரமான நடிப்பினால் பல ரசிகர்களை கொண்டவர். 2009 ஆம் ஆண்டு நாடோடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அபிநயா. இவரை அறிமுகம் செய்தவர் நடிகர் மற்றும் இயக்குனர் சசிகுமார் ஆகும்.

முதல் படத்தின் மூலமாகவே அனைவரின் கவனத்தையும் ஈர்த்த அபிநயா சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம்பேர் விருது சிறந்த துணை நடிகைக்கான விஜய் விருது போன்ற விருதுகளை வென்றார். தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், ஈசன், ஏழாம் அறிவு போன்ற பல முன்னணி நடிகர்கள் திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றார் அபிநயா.

தமிழ் மட்டுமல்லாது மலையாளம் தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களிலும் நடித்து பிரபலமான நடிகையாக பிஸியான நடிகையாக இருந்து வருகிறார் அபிநயா. இந்நிலையில் தற்போது தனது நீண்ட நாள் காதலனை திருமணம் செய்து கொண்டார் அபிநயா. அதற்குப் பிறகு அபிநயாவின் கணவரும் அவரை போலவே மாற்று திறனாளி தான் என்ற செய்திகள் வெளியானது. அதைப் பற்றி அபிநயாவின் தந்தை பகிர்ந்துள்ளார்.

அபிநயாவின் தந்தை கூறியது என்னவென்றால், ஒரு நார்மலான மனிதரை தான் உனக்கு திருமணம் செய்து வைக்க நானும் உன் அம்மாவும் ஆசைபடுகிறோம் என்று கூறினேன். அதற்கு அவள் என்னை போல ஒருவரை திருமணம் செய்து கொண்டால் தான் என் உணர்வுகளை அவரால் புரிந்து கொள்ள முடியும் என்று கூறிவிட்டாள். அவளின் விருப்பத்திற்கு நான் தடை சொல்லவில்லை என்று பகிர்ந்துள்ளார் நடிகை அபிநயாவின் தந்தை.