தாயாரின் இறுதிச் சடங்கை வீடியோ காலில் பார்த்து அழுத இர்பான் கான்!!

பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான் 1988 ஆம் ஆண்டு தனது சினிமா வாழ்க்கையினைத் துவக்கினார். ஏறக்குறைய 32 ஆண்டுகள் சினிமாவில் இருந்துவரும் இவர் 45 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். உலகளவில், கான்…

பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான் 1988 ஆம் ஆண்டு தனது சினிமா வாழ்க்கையினைத் துவக்கினார். ஏறக்குறைய 32 ஆண்டுகள் சினிமாவில் இருந்துவரும் இவர் 45 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

உலகளவில், கான் தி வாரியர் (2001), தி நேம்சேக் (2006), தி டார்ஜிலிங் லிமிடெட் (2007), ஸ்லம்டாக் மில்லியனர் (2008), நியூயார்க், ஐ லவ் யூ (2009) போன்ற பல சர்வதேச திட்டங்களில் பணியாற்றியுள்ளார். தி அமேசிங் ஸ்பைடர் மேன் (2012), லைஃப் ஆஃப் பை (2012), ஜுராசிக் வேர்ல்ட் (2015) மற்றும் இன்ஃபெர்னோ (2016) போன்ற படங்களில் நடித்ததன் மூலம் இவர் உலக அளவில் பிரபலமான ஒரு நடிகரானார்.

இவருக்கு 2018 ஆம் ஆண்டு கேன்சர் இருப்பதாக இவரே அறிவித்தார், அதன்பின்னர் வெளிநாடு சென்று சிகிச்சை பெற்றுவந்த இவர் 2 ஆண்டுகள் அதாவது 2017-2019 கால கட்டங்களில் நடிக்கவில்லை.

ebb3d027111cd40de3b16093e07d2811

தற்போது உடல்நலம் திரும்பி சம்பக் பன்சலாக ஆங்ரேஸி மீடியம் (2020) என்ற திரைப்படத்தில் கடைசியாக நடித்தார். தற்போது கொரோனாவால் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நிலையில் மும்பையில் உள்ள தனது வீட்டில் முடங்கியிருக்கும் அவரின் தாயார் இறந்துள்ளார்.

இர்பான் கான் ஜெய்ப்பூரில் வசித்து வந்ததால், ஊரடங்கு காரணமாக அதில் இர்பான் கானால் கலந்து கொள்ள முடியவில்லை. எனவே அவரது உறவினர்கள் வீடியோ கால் மூலமாக இறுதி சடங்குகளை இர்பான் கானிடம் காட்ட, அதைப் பார்த்து கதறி அழுதுள்ளார் இர்பான் கான்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன