இந்தியன் 2 படத்தில் கமலுடன் நடிப்பது சந்தோஷம்- ஜார்ஜ் மரியான்

சமீபத்தில் வந்த கைதி படத்தில் கமிஷனர் ஆபிஸில் ஒற்றை போலீசாக இருந்து பெரிய ரவுடி கும்பலை சமாளிக்கும் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தவர் ஜார்ஜ் மரியான். ஒரு காட்சியில் இவர் ஹீரோ போல எகிறி அடிப்பது…

சமீபத்தில் வந்த கைதி படத்தில் கமிஷனர் ஆபிஸில் ஒற்றை போலீசாக இருந்து பெரிய ரவுடி கும்பலை சமாளிக்கும் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தவர் ஜார்ஜ் மரியான். ஒரு காட்சியில் இவர் ஹீரோ போல எகிறி அடிப்பது போல எல்லாம் காட்சி அமைத்திருந்தார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

fbbaa21eb25614efba36a549fa29e876

சில வருடங்கள் முன் வந்த கலகலப்பு படத்தில் இவர் மனநிலை பாதிக்கப்பட்ட போலீஸ் போல பல சினிமா படங்களின் போலீஸ் கதாபாத்திரங்களை சொல்லும் கதாபாத்திரத்தில் நடித்து கலகலக்க வைத்தார்.

முதல் படம் இவருக்கு அழகி திரைப்படம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விசயம். கூத்துப்பட்டறையில் பயின்ற இவருக்கு அதில் பயின்ற பசுபதி விருமாண்டி பட வாய்ப்பு வாங்கி கொடுத்தும் கமலுடன் நடிக்க முடியாமல் போய்விட்டதாம். இப்போது அதை நிறைவேறும் விதமாக இந்தியன் 2 படத்தில் கமலுடன் நடிக்கிறாராம் இவர்.

இவர் ஒரு சிறந்த கலைஞர் என்பதை மறுக்க முடியாது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன