தென்னிந்திய முன்னணி இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாக இந்தி திரையுலகில் ஷாருக்கானுக்கு ஜோடியாக அறிமுகமாகியுள்ளார். மேலும் இந்த படத்தில் தீபிகா படுகோன், வில்லனாக விஜய் சேதுபதி, பிரியா மணி, யோகி பாபு எனும் பெரிய நட்சத்திர கூட்டமே நடித்துள்ளது.
ஜவான் திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களையும், பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இந்த படத்தில் அனிருத்தின் தெறிக்க விடும் பாடல்கள், தீம் மியூசிக் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. ஷாருக்கானின் பதான் படத்தை விட இந்த படத்தில் ஆக்சன் காட்சிகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஷாருக்கான் இதுவரை நடித்த படங்களை விட சற்று மாறுதலான கோணத்தில் ஜவான் படத்தில் நடித்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.
மேலும் படத்தில் நயன்தாரா மிக ஸ்டைலாகவும், துணிச்சலாகவும் நடித்துள்ளார். அடுத்து விஜய் சேதுபதி தாறுமாறாக தனது வில்லத்தனத்தில் பிண்ணி எடுத்துள்ளார். இப்படி ஜவான் படம் குறித்து நல்ல விமர்சனங்கள் வந்தாலும் எப்பொழுதும் உள்ள அட்லி படங்களில் சாயல் சில இடங்களில் தென்படுகிறது.
இந்நிலையில் அட்லியின் ஜவான் படத்தின் கதை குறித்து சர்ச்சை தகவல் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. பொதுவாக அட்லியின் படங்கள் காப்பி கதை என்ற சர்ச்சையில் சிக்குவது வழக்கம். அட்லியின் முதல் படமான ராஜா ராணி முதல் மெர்சல், பிகில், தெறி என அவர் இயக்கிய அனைத்து படங்களும் பழைய படங்களின் காப்பி என்ற சர்ச்சையில் சிக்கி பின்னர் படம் மாபெரும் ஹிட் அடித்துள்ளது.
ஷாருக்கானை தொடர்ந்து அஜித்துடன் கைகோர்க்கும் அட்லி!
ஆனால் இந்த முறை அட்லியின் ஜவான் கதை வெளிவராத படத்தின் காப்பி என்று தற்பொழுது தகவல் வெளியாகி குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி ஜவான் படத்தின் மையக்கதை விவசாயிகளின் தற்கொலை வைத்து தான் படம் விறுவிறுப்பாக நகரும். அந்த மையக்கருத்து அப்படியே பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் உள்ளதாக என தகவல் கிசுகிசுக்கப்படுகிறது.
இந்த தகவலை அறிந்த இயக்குனர் சங்கர் கடும் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த காட்சி எப்படி வெளியானது என்றும் குழப்பத்தில் இந்தியன் 2 படக்குழு உள்ளது. இருப்பினும் ஒத்த சிந்தனை அடிப்படையில் இந்த இரண்டு இயக்குனர்களுக்கும் ஒரே எண்ணம் வந்திருந்தாலும் சிஷியன் அட்லியால் குரு சங்கருக்கு தற்பொழுது பிரச்சனை என்று தகவல் கிடைத்துள்ளது.