இன்னும் இரண்டே நாட்களில் அனைவரும் காத்துக் கொண்டிருந்த கோட் திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கின்றது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் தான் கோட். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
படத்தில் விஜய் உடன் இணைந்து எண்ணற்ற பல முக்கிய பிரபலங்களும் நடித்திருக்கின்றனர். அனைவருமே 90கள் காலகட்டத்தில் ஒரு டாப் ஸ்டார்களாக இருந்தவர்கள் தான். அதனால் இந்தப் படத்தில் விஜய் தவிர கூட நடிக்கும் நடிகர்களுக்கும் முக்கியமான காட்சிகளைத்தான் வெங்கட் பிரபு கொடுத்திருப்பார் என்று தெரிகிறது.
யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதைப் போல படத்தில் நடித்த அத்தனை நடிகர்களுமே ஒரு காலத்தில் முன்னணி ஹீரோக்களாக இருந்தவர்கள் தான். இவர்கள் எல்லாரையும் தாண்டி விஜயகாந்தும் இந்த படத்தில் ஏ ஐ மூலமாக நடிக்கிறார். இதைப்பற்றி வெங்கட் பிரபு ஒரு பேட்டியில் கூறும்போது படத்தில் விஎஃப்எக்ஸ் எஸ் மற்றும் ஏஐ தொழில்நுட்பம் மூலம் விஜயகாந்தை கேமியோ ரோலில் சாத்தியப்படுத்தியுள்ளோம்.
ஏஐ மூலம் ஒருவரை கொண்டு வர வேண்டும் என்றால் அவருடைய முந்தைய ரெஃபரன்ஸ் கண்டிப்பாக தேவைப்படும். அதனால் இந்த படத்தில் கேப்டன் பிரபாகரன் விஜயகாந்த் சாரை தான் திரும்பக் கொண்டு வந்திருக்கிறோம் என கூறியிருக்கிறார் .இதிலிருந்து இன்னும் இந்த படத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
விஜயகாந்துக்கு அவருடைய நூறாவது படமாக அமைந்தது தான் கேப்டன் பிரபாகரன். அதுவும் எந்த நடிகர்களுக்கும் அவர்களுடைய நூறாவது திரைப்படம் வெற்றி படமாக அமையவில்லை. விஜயகாந்திற்கு மட்டும்தான் நூறாவது படம் வெற்றி படமாக அமைந்தது.
அதிலும் கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் விஜயகாந்த் வரும் காட்சிகளில் அவருக்கு போடப்பட்ட பிஜிஎம் இன்றளவும் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. அதனால் அந்த பிஜிஎம் கோட் திரைப்படத்தில் விஜயகாந்த் வரும்போது ஒலிக்கப்படுமா என தெரியவில்லை .அப்படியே ஒலித்தால் அது இன்னும் ரசிகர்களுக்கு ஒரு கூஸ்பம்பாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.