கேட்டாலே உருக வைக்கும் பக்திப் பாடல்.. வராமல் போன கே.ஜே.யேசுதாஸ்.. மெய்மறந்து பாடிய இளையராஜா..

By John A

Published:

இளையராஜா இசைக் கடவுள் ஏன் என போற்றப்படுகிறார் என்பதற்கு இந்தப் பாடல் ஓர் உதாரணம். இயக்குநர் கே. சங்கர் இயக்கத்தில் இந்துக் கடவுள் தாய் மூகாம்பிகையின் அற்புதங்களைப் போற்றும் வகையில் 1982-ல் தாய் மூகாம்பிகை என்ற திரைப்படம் வெளியானது.

இதில் கே.ஆர். விஜயா தாய் மூகாம்பிகையா நடித்திருப்பார். அவருடன் ஜெய்சங்கர், சிவக்குமார், கார்த்திக், சுஜாதா உள்ளிட்ட பலர் நடித்திருப்பர். இந்தப் படத்தினைப் பார்க்காதவர்கள் பலர் இருக்கலாம். ஆனால் இப்படத்தில் இடம்பெற்ற ஒருபாடலை கேட்காதவர்கள் யாரும் கிடையாது.

அந்தப் பாடல் தான் ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ என்ற பாடல். மகான் ஆதிசங்கரர் தாய்மூகாம்பிகை மீது பாடப்படும் பாடலாக அமைந்திருக்கும். இப்பாடலுக்கு முதலில் இளையராஜா வேறொரு டியூனை போட்டிருந்தாராம். ஆனால் அந்த டியூன் நன்கு சங்கீதம் தெரிந்த ஒருவர்தான் பாட முடியும். மேலும் காட்சியும் அதேபோல் வேண்டும் என்பதால் இயக்குநரிடம் காட்சி அமைப்பைக் கேட்டிருக்கிறார்.

அப்போது வேறொரு டியூன் போடலாம் என்று இயக்குநரிடம் கூற, முதலில் போட்ட டியூனுக்கு இந்தப் காட்சி பொருந்தாது. ஆதிசங்கரர் பாடுவது போல் இருக்காது என்று கூறி இரண்டாவதாக வேறொரு டியூன் போட்டிருக்கிறார்.

சுப்ரமணியபுரம் படத்துல இப்படி ஒரு பிளானே இல்ல..! ரகசியத்தை உடைத்த சசிக்குமார்..

பின்னர் முதல் நாள் ஆதிசங்கரரை வணங்கிவிட்டு ரெக்கார்டிங் ஸ்டுடியோவிற்குச் சென்று டியூனைப் போட வாலி ஜனனி ஜனனி அகம் நீ அகம் நீ என வரிகளை எழுதியிருக்கிறார். இப்போது இதுபோன்ற பாடல்களுக்கு கே.ஜே.யேசுதாஸ் பாடினால்தான் நன்றாக இருக்கும் என்று கூறி அவரை பாட வைக்க முயற்சித்த போது அப்போது அவர் வெளிநாடு சென்றிருந்தால் இளையராஜவே முதலில் டிராக் பாடி விடுவோம் பின்னர் யேசுதாஸ் வந்தவுடன் ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம் என்று அவரே பாடியிருக்கிறார்.

இளையராஜா பாடி முடித்ததும் அனைவருககும் மிகுந்த சந்தோஷம். இந்தப் பாடல் நீங்கள் பாடியது போலவே இருக்கட்டும் நன்றாக இருக்கிறது என்று இயக்குநர் கே. சங்கர் சொல்லியிருக்கிறார். இளையராஜா ரெக்கார்டிங் ஸ்டுடியோவை விட்டு வெளியே வந்ததும் எதேச்சையாக அவர் கையில் ஒரு டியூன்பேப்பர் தென்பட அதில் ஜனனி ஜனனி டியூனும், பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் என்ற டியூனும் ஒன்றாக இருப்பதைக் கண்டு மெய்சிலிர்த்துப் போயிருக்கிறார்.

இந்தப் பாடல் இன்றும் கேட்கும் போது இனம் புரியாத ஓர் தெய்வீக உணர்வு மனதிற்குள் ஏற்படுவதை உணரலாம். இதனால் தான் இளையராஜா இசைக் கடவுளாகப் போற்றப்படுகிறார்.