இளையராஜா இசையில் அதிகம் தெரியாத பாடல்- மாஞ்சோலை கிளியிருக்கு

கடந்த 1990ம் ஆண்டு வெளியான திரைப்படம் அம்மன் கோவில் திருவிழா . அந்த நேரத்தில் வெளியான கரகாட்டக்காரன் படத்தினை அடுத்து அது போன்ற கிராம சாயலில் வந்த படம்தான் அம்மன் கோவில் திருவிழா. இந்த…

manjolai kiliyirukku song

கடந்த 1990ம் ஆண்டு வெளியான திரைப்படம் அம்மன் கோவில் திருவிழா . அந்த நேரத்தில் வெளியான கரகாட்டக்காரன் படத்தினை அடுத்து அது போன்ற கிராம சாயலில் வந்த படம்தான் அம்மன் கோவில் திருவிழா.

இந்த படத்தில் கரகாட்டக்காரன் படத்தின் சாயல்கள் போலவே சில பாடல்கள் வந்திருந்தன.

சிறுமுகை ரவி இந்த படத்தை இயக்கி இருந்தார் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் அனைவரையும் கவர்ந்தது பாடலும் கேட்க ஏ ஒன் என்று சொல்லும் வகையில்தான் இன்றளவும் இருக்கும்.

ஆனால் மற்ற இளையராஜாவின் பாடல்கள் மிக பிரபலம் ஆனது போல் இப்பாடல் பிரபலம் ஆகவில்லை அந்த பாடல்தான் மாஞ்சோலை கிளியிருக்கு என்ற பாடல்.

இளையராஜாவே பாடி இருந்த இந்த பாடல் மிக இனிமையான பாடலாகும். மாஞ்சோலை கிளியிருக்கு என்ற இந்த பாடல் கேட்க கேட்க திகட்டாத பாடல் ரகத்தை சேர்ந்தது.

இந்த பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் பாடலாம்.அவ்வளவு இனிமையான பாடலாகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன