இளையராஜா தமிழை தவிர்த்து ஹிந்தி, மலையாளம், கன்னடம் மற்ற மொழி பாடல்களிலும் அதிக கவனம் செலுத்தி இருந்தாலும் தமிழுக்கு அடுத்தபடியாக தெலுங்கு மொழி பாடல்களுக்குத்தான் அதிகம் முக்கியத்துவம் கொடுத்துள்ளார். தமிழுக்கு அடுத்தபடியாக இளையராஜாவின் தெலுங்கு மொழி பாடல்களே ஹிட் அடித்துள்ளன.
அதிலும் சிரஞ்சீவி இளையராஜா காம்பினேசன் அப்படி ஒரு காம்பினேசன் தான். அது மாதிரியாக வந்த ஒரு படம்தான் மாரண ம்ருதங்கம்
கடந்த 1988ல் வெளிவந்த இந்த திரைப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக சுகாசினி, ராதா நடித்தனர்.
இப்படத்தில் இளையராஜா போட்டு கொடுத்த பாடல்கள் எட்டுத்திக்கும் ஹிட் என்ற அளவில் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் அட்டகாசமாக இருந்தன.
குறிப்பாக கரிகி பொயானு என்ற காதல் பாடலில் இளையராஜா நிறைய மாயாஜாலங்களை காட்டி இருந்தார் அப்பாடல்தான் இப்படத்தின் பெரும் ஹிட். கொத்தண்டி திட்டண்டி, கொடவே கொடவம்மா, ஜிங்கிலி ஜும ஜும போன்ற பாடல்கள் ஹிட் ஆகின
கீழ் உள்ள லிங்கில் அந்த பாடல்கள் உள்ளன.