இளையராஜா இசை என்றாலே அது தேவாமிர்தம் தான் பல மொழிகளிலும் மிக அருமையாக கேட்கும் வகையிலும் காலத்தால் அழியாத பாடல்களை படைத்தவர் இசைஞானி இளையராஜாவாகத்தான் இருக்க முடியும்.
இளையராஜாவும் இயக்குனர் வம்சியும் இணைந்த மகரிஷி, அன்வேஷனா படம் பற்றியும் பாடல்கள் பற்றியும் ஏற்கனவே பார்த்துள்ளோம்.
இவர்களது வெற்றி கூட்டணியில் வந்த ஒரு படம்தான் பிரேமின்சு பெல்லடு 1985ல் வெளிவந்த இந்த திரைப்படத்தில் ராஜேந்திர பிரசாத், பானுப்ரியா நடித்திருந்தனர்.
தமிழில் ஆனந்த கும்மி படத்தில் இடம்பெற்ற ஓ வெண்ணிலாவே என்ற பாடலை இப்படத்தில் ஓ சைத்ர வீணாவாக படைத்திருந்தார்.
படத்தில் இடம்பெற்ற ஒய்யாரி கோதாரம்மா. நிரந்தரமு , ஆடே பாடே, ஈ சைத்ர வீணா பாடல்கள் புகழ்பெற்ற பாடல்களாக விளங்கின.
படத்தின் பாடல்கள் ஹிட் ஆகின. பாடல்கள் இதோ.