இசைஞானி இளையராஜாவின் ஆரம்ப காலத்திலிருந்து அவருக்கு வலது கையாய் விளங்கியவர் கங்கை அமரன். இளையராஜா போட்ட மெட்டுக்களுக்கு ஒலி வடிவம் கொடுப்பவர். ஸ்டுடியோவில் இவரது பங்கே அதிகம். ஒருமுறை மலேசியா வாசுதேவனின் நண்பர் ஒருவர் படம் தயாரிக்க முடிவெடுத்த போது மலேசியா வாசுதேவன் கங்கை அமரனை தனியாக இசைமைத்துத் தருமாறு கேட்டிருக்கிறார்.
அப்போது இளையராஜா வேண்டாம் என்று சொல்ல, இவர்களின் குருவான இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ் இளையராஜாவிடம் என்னிடம் இருக்கும் போது நீ தனியாகச் செல்கிறேன் என்ற போது வாழ்த்தி அனுப்பி வைத்தேன் அல்லவா..அதேபோல் கங்கை அமரனும் ஆசைப்படுகிறார் என்று கூற சுவர் இல்லாத சித்திரங்கள் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
அந்தப் படத்தில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆக, தொடர்ந்து பாடலாசிரியராகவும் ஜொலித்தார் கங்கை அமரன். இப்படி இயக்கம், இசை, பாடல்கள், தயாரிப்பு என சினிமாவின் பல பரிணாமங்களில் ஜொலித்த கங்கை அமரன் இசையில் வந்த படம் தான் வாழ்வே மாயம். வாழ்வே மாயம் இசையமைத்த கால கட்டத்தில் இளையராஜா கமல்ஹாசனின் 100-வது படமான ராஜபார்வை படத்திற்கு இசையமைத்துக் கொண்டிருந்தார்.
சாதியை வென்ற மாரிசெல்வராஜின் காதல் திருமணம்.. தடைகளைத் தாண்டி காதலியை மனைவியாக்கிய தருணம்..
இப்படி இருவருமே கமல்ஹாசனின் படங்களில் பணிபுரிந்து கொண்டிருக்க இளையராஜா இசையமைத்த பாடல் அந்தி மழை பொழிகிறது என்ற பாடலும், கங்கை அமரன் வந்தனம் வந்தனம்.. என்ற பாடலையும் ஒரு சேர இசையமைத்திருக்கின்றனர். இந்த இரு பாடல்களுமே ஒரே மெட்டில் உருவானது. இப்படி தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்ற பழமொழிக்கிணங்க அண்ணன் என்ன மெட்டினை உருவாக்கினாரோ அதே மெட்டை இருவருமே ஒருவருக்கொருவர் அறியாமல் டியூன் போட்டு சூப்பர்ஹிட் பாடல்களைக் கொடுத்தனர்.
இந்த தருணத்தில் இளையராஜா கங்கை அமரைனை அழைத்து 30 பவுன் தங்கச் சங்கிலியை அவர் கழுத்தில் அணிவிக்க சுற்றியிருந்த இசைக் கலைஞர்கள் அனைவருமே இவர்களின் பாசத்தினை நினைத்து நெகிழ்ந்து போயினர். அதன்பின் கங்கை அமரன் இயக்கிய கரகாட்டக்காரன் படத்திற்கு இளையராஜா இசையமைத்து மாபெரும் வராற்றுச் சாதனை படைத்தார்கள். மேலும் பூஜைக்கேத்த பூவிது போன்ற சில சூப்பர் ஹிட் பாடல்களையும் பாடியிருக்கிறார் கங்கை அமரன்.