இராமநாதபுரத்தில் உள்ள முக்கிய ஸ்வீட் ஸ்டால்களில் நகரெங்கும் அதிக கிளைகளை கொண்ட முன்னணி பேக்கரி நிறுவனம் ஐஸ்வர்யா பேக்கரி நிறுவனம்.

இவர்கள் சாதனைக்காக பிரமாண்ட கேக்குகள் தயாரித்து வெளியில் வைப்பார்கள். உலக கோப்பையின்போது மிக உயரமான உலக கோப்பை கேக் செய்து வைத்திருந்தார்கள்.
அப்படியாக இப்போது இசைஞானியின் 40 ஆண்டுகால இசை சாதனையை பாராட்டும் விதமாக 50 கிலோ சர்க்கரை மற்றும் மாவு கொண்டு 5 அடி உயரத்தில் இசைஞானி இளையராஜாவின் உருவத்தோடு உடைய கேக் செய்து பார்வைக்காக வைத்துள்ளனர்.
இதை பார்வையாளர்கள் பார்த்து புகைப்படம் எடுத்து கொள்கின்றனர்.