இளையராஜா- பாரதிராஜா இணைந்த புகைப்படம் ட்ரெண்டிங்கில்

இசைஞானி இளையராஜா, இயக்குனர் இமயம் பாரதிராஜா இருவரும் சேர்ந்து பணியாற்றிய பல படங்களில் பாடல்கள் பின்னணி இசை முதலியவை அருமையாக வந்திருந்துள்ளது. புதிய வார்ப்புகள், 16 வயதினிலே, அலைகள் ஓய்வதில்லை, நிறம் மாறாத பூக்கள்,…

இசைஞானி இளையராஜா, இயக்குனர் இமயம் பாரதிராஜா இருவரும் சேர்ந்து பணியாற்றிய பல படங்களில் பாடல்கள் பின்னணி இசை முதலியவை அருமையாக வந்திருந்துள்ளது.

938f20afbdc341f870f7928e552d82f6

புதிய வார்ப்புகள், 16 வயதினிலே, அலைகள் ஓய்வதில்லை, நிறம் மாறாத பூக்கள், நிழல்கள், முதல் மரியாதை, கடலோரக்கவிதைகள், புது நெல்லு புது நாத்து உள்ளிட்ட பல படங்கள் பாரதிராஜா இயக்குனராகவும், இளையராஜா இசையமைப்பாளராகவும் பணியாற்றிய படங்கள் ஆகும். இந்த படங்கள் எல்லாம் மியூசிக்கல் ஹிட்.

எண்பதுகளின் இறுதியிலேயே இருவருக்கும் மனஸ்தாபங்கள் ஏற்பட ஒரு கட்டத்தில் இருவரும் இணைந்து பணியாற்றவே இல்லை. அவ்வப்போது ஏதாவது மேடைகளில் சந்திப்பதோடு சரி.

ஆனால் நேற்று இவர்களது சொந்த ஊர் தேனியில் இருவரும் சந்தித்து காருக்குள்ளேயே புகைப்படம் எடுத்துக்கொண்டது நேற்று முதல் இன்று வரை சமூக வலைதள ட்ரெண்டிங்கில் உள்ளது.

இருவரது இணைவால் மீண்டும் இவர்களது கூட்டணியில் படம் எதுவும் வருமா என ரசிகர்கள் ஏங்க ஆரம்பித்துள்ளனர் என்பது உண்மை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன