இசைஞானி, ராகதேவன் என்று போற்றப்படுபவர் இளையராஜா. 80களில் இவர் தான் தமிழ்த்திரை உலகில் அசைக்க முடியாத இடத்தில் இருந்தார். எத்தனையோ சாதனைகளுக்குச் சொந்தக்காரர். இவரது பாடல்களை இப்போது கேட்டாலும் ஆனந்தம் தான். இவருடைய இசைக்கு மயங்காதவர்களே இல்லை எனலாம்.
மேடைக்கச்சேரி
80 வயதைக் கடந்தும் கூட இன்றும் பல மேடைக்கச்சேரிகளைத் திறம்பட நடத்தி வருகிறார். அங்கு வரும் கூட்டத்தைப் பார்க்கும்போது இன்றும் இளையராஜா தமிழ் சினிமா ரசிகர்களின் நெஞ்சில் நீங்காத இடத்தைப் பிடித்திருப்பதை உணர முடிகிறது. அந்தவகையில் இளையராஜா வெறும் அரை மணி நேரத்தில் இசை அமைத்த பாடல் குறித்துப் பார்க்கலாம்.
அரை மணி நேரம்
ஒரு பாடலே அஞ்சு நிமிஷம் ஓடும். அந்தப் பாடலுக்கு சூழலுக்கு ஏற்ப டியூன் போட்டு கம்போசிங் பண்ண வேண்டும் என்றால் நிச்சயமாக நீண்ட நேரம் ஆகும். ஆனால் சில சமயம் இசையிலேயே ஊறிய ஜாம்பவான்களுக்கு அது சீக்கிரத்தில் முடிந்துவிடும். அந்தவகையில் இசைஞானி இளையராஜா ஒரு பாடலை வெறும் அரை மணி நேரத்திற்குள் உருவாக்கி விட்டார். அது என்ன பாடல்னு பாருங்க.
தென்றல் வந்து…
ஒரு பாடலை உருவாக்க வெளிநாட்டுப் பயணமோ, அழகான லொக்கேஷன்களோ போக வேண்டும். அப்போது தான் மூடு வரும் என சிலர் சொல்வார்கள். ஆனால் இளையராஜாவுக்கு அப்படிப்பட்ட அனுபவம் தேவையில்லை. அவரைப் பொறுத்தவரை ஒரு பாடலை உருவாக்க நாள் கணக்கோ, வார கணக்கோ அல்லது மாதக்கணக்கோ தேவைப்பட்டதும் இல்லை. சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். ‘தென்றல் வந்து தீண்டும்போது’ என்ற பாடலை உருவாக்க இளையராஜா எடுத்துக் கொண்டது வெறும் அரை மணி நேரம் தான்.
அவதாரம்
1995ல் நாசர் இயக்கி நடித்த படம் அவதாரம். ரேவதி அவருக்கு ஜோடியாக நடித்து இருந்தார். ஸ்ரீவித்யா, டெல்லிகணேஷ், காகா ராதாகிருஷ்ணன், சச்சு, தியாகு உள்பட பலரும் நடித்து இருந்தனர். இந்தப் படத்தைத் தயாரித்தவர் வைத்தியநாதன். இளையராஜாவின் இசை படத்திற்குப் பக்கபலமாக இருந்தது. படத்தில் அத்தனைப் பாடல்களும் சூப்பர்ஹிட். 6 பாடல்களையும் வாலி எழுதி இருந்தார்.
தமிழக அரசு விருது
இந்தப் படத்துக்கு தமிழக அரசு விருது கொடுத்து கௌரவித்தது. படத்தில் 6 பாடல்களுக்கும் இசை அமைக்க இளையராஜா எடுத்துக் கொண்டது 3 நாள்கள் தான். தென்றல் வந்து, ஒரு குண்டுமணி, சந்திரரும் சூரியரும், தென்றல் வந்து தீண்டும் போது, அரிதாரத்தை பூசிக்கொள்ள ஆசை ஆகிய பாடல்கள் உள்ளன. படத்தில் நாசர் வித்தியாசமான ரோலில் நடித்து ஆச்சரியப்படுத்தி இருந்தார்.
ரேவதியும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். ஆனாலும் படம் வணிகரீதியாக பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. ஆனால் ரசிகர்களால் கலைப்படமாகக் கொண்டாடப்பட்டது.