இளையராஜா இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளர்களுள் ஒருவர். 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதை தொடர்ந்து இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார் இளையராஜா.
தமிழக நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, மேற்கத்திய இசை ஆகியவற்றில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர் இளையராஜா. சிறந்த இசை அமைப்பாளர்கான தேசிய விருதினை நான்கு முறை பெற்று இருக்கிறார். இவரது தம்பி கங்கை அமரன் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் இயக்குனராகவும் பணிபுரிந்தவர்.
மேலும் இளையராஜா அவர்களின் மகன் கார்த்திக் ராஜா ஒரு இசையமைப்பாளர் மற்றும் யுவன் சங்கர் ராஜா பிரபல புகழ்பெற்ற இசையமைப்பாளர் மற்றும் இவரது மறைந்த மகள் பவதாரிணி கூட சிறந்த பாடகி ஆவார். தற்போது இளையராஜா தான் உருவாக்கிய சிம்பொனியை லண்டனில் வெற்றிகரமாக அரங்கேற்றியுள்ளார். இந்நிலையில் இசைஞானி இளையராஜா அவர்களை பற்றிய ஒரு சுவாரசிய தகவல் வெளியாகியிருக்கிறது.
அது என்னவென்றால் இசைஞானி இளையராஜா மிகவும் கடினமாக உழைக்கக்கூடியவராம். அவர் இசையமைக்க தொடங்கிய காலத்தில் பிரபலமாக இருக்கும்போது ஒரே ஆண்டில் 58 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக அவரே ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். ஒரு படத்திற்கு பின்னணி இசை அமைக்க மூன்று நாட்கள் மட்டுமே எடுத்துக் கொள்வாராம். அப்படி உழைப்புக்கு முன் உதாரணமாக இருந்திருக்கிறார் இளையராஜா.